திருமணம் செய்வதாக கூறி மோசடி.. மாஜி அமைச்சர் மரியம் பிச்சை மகனுக்கு 10 ஆண்டு சிறை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மாஜி அமைச்சர் மரியம் பிச்சை மகனுக்கு 10 ஆண்டு சிறை!

  திருச்சி: முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சை மகனுக்கு 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் ஆசிக்மீரான். இவர் திருச்சி மாநகராட்சியின் துணை மேயராக இருந்தார்.

   Former minister Mariyam pichai son Asiq meeran got 10 years prison for cheating woman

  இந்நிலையில் ஆசிக் மீரான் திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றியதாக துர்கேஸ்வரி என்ற பெண் ஒருவர் திருச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2014ஆம் ஆண்டு ஆசிக் மீரான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

  இதுதொடர்பான வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றிய வழக்கில் ஆசிக் மீரானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  இதேபோல் குற்றத்திற்கு உடைந்தையாக இருந்ததாக கூறி ஆசிக் மீரானின் மாமியாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாயும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிக் மீரானின் 2 நண்பர்களுக்கும் திருச்சி மகளிர் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Former minister Mariyam pichai son Asiq meeran got 10 years prison for cheating woman. Trichy mahila court has been sentenced to 10 years in prison.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற