அதிமுகவில் பட்ட கஷ்டம்! தவெகவில் மரியாதை கொடுத்தால் போதும்! பதவிலாம் வேண்டாம்! உடுமலை ராதாகிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் கடந்த 9 ஆண்டுகளாக நாங்கள் பெயருக்குத்தான் இருந்தோம் என்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை முதல்வர் விஜய் கொடுத்து வருகிறார் என்றும் தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குமுறியுள்ளார்.

Udumalai Radhakrishnan

தமிழக அரசியல் வட்டாரத்தில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களும் பரபரப்புகளும் அரங்கேறி வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் அண்மைய பேட்டி ஒன்று தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவிற்கு அடுத்த ஷாக்!

சமீப நாட்களாக அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த பல்வேறு முக்கியப் புள்ளிகளும், முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்து வருகின்றனர். குறிப்பாக, திருச்சியைச் சேர்ந்த அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தவெகவில் இணைந்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது.

இந்நிலையில், அதிமுகவின் மற்றொரு மிக முக்கியப் புள்ளியான உடுமலை ராதாகிருஷ்ணனிடம், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் முதல்வர் விஜய் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த அதிரடியான பதில் ஒட்டுமொத்த அரசியல் அரங்கையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

"விஜய்யை எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் ஒப்பிடுகிறோம்!"

செய்தியாளர்களின் கேள்விக்கு ஓப்பனாகப் பதிலளித்த உடுமலை ராதாகிருஷ்ணன், "தமிழக மக்கள் மற்றும் எங்களைப் போன்ற அரசியல்வாதிகள் பலரும், புதிய முதல்வர் விஜய்யை சாதாரண ஒரு அரசியல் தலைவராகப் பார்க்கவில்லை. அன்று தமிழகத்தை ஆண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை மக்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தார்களோ, அதே போன்ற ஒரு மாபெரும் மக்கள் தலைவராகத்தான் இன்று முதலமைச்சர் விஜய்யையும் நாங்கள் பார்க்கிறோம்" என்று மிக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக தலைமை எடுத்த சில முடிவுகள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த முடிவுகள் என்ன என்பது குறித்து வெளியில் பேச நாங்கள் விரும்பவில்லை. ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகத்தை தற்போது தமிழக அரசு சீரமைத்து சிறப்பாக செயல்பட செய்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீணை காயத்ரி, "அம்மா உணவகம் சென்று இரு இட்லிகளை சாப்பிட்டு காலை உணவை வெறும் 2 ரூபாயில் முடித்துவிட்டேன்" என தெரிவித்திருந்தார். அந்த அளவுக்கு உணவகம் சிறப்பாக செயல்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 9 ஆண்டுகளாக பெயருக்குத்தான் அதிமுகவில் இருந்தோம். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவதற்காக நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து உழைப்போம்.

தவெகவில் நாங்கள் பதவியை எதிர்பார்த்து வரவில்லை. மரியாதை கிடைத்தால் போதும். அதை ஆதவ் அர்ஜுனாவும் புஸ்ஸி ஆனந்தும் உறுதி செய்துவிட்டார்கள். அது போதும் என உடுமலை ராதாகிருஷ்ணன் பேசியிருந்தார்.

அரசியல் முக்கியத்துவம் என்ன?

அதிமுகவில் உள்கட்சிப் பூசல்கள் மற்றும் தலைமை மீதான அதிருப்திகள் நிலவி வரும் இந்தச் சூழலில், அக்கட்சியின் முன்னாள் அமைச்சரே ஓபனாக தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய்யை, தங்களின் ஆதர்ச தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது அனலைக் கிளப்பியுள்ளது.

ஏற்கனவே பல அதிமுக விக்கெட்டுகள் தவெக கூடாரத்தை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், உடுமலை ராதாகிருஷ்ணனின் இந்தத் திடீர் ஆதரவுப் பேச்சு, அவர் அடுத்ததாக ஏதேனும் புதிய அரசியல் முடிவை எடுக்கப் போகிறாரா? என்ற விவாதத்தை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் தீவிரப்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+