மாஜி அதிமுக எம்.எல்.ஏ.வின் பேரன் அட்டகாசம்.. பெண்ணை மணந்து கொள்வதாக கூறி மோசடி.. கைது
முன்னாள் எம்எல்ஏ பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி: பெண்ணை காதலித்ததுடன், 2 வருஷமாக கல்யாணமும் செய்து கொள்வதாக ஏமாற்றிய குற்றத்திற்காக முன்னாள் எம்எல்ஏவின் பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் அதிமுக எம்எல்ஏ துரை. இவர் இப்போதும் அதிமுகவில்தான் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது பேரன்தான் ராம்பிரசாத் என்பவர். 26 வயதாகும் இவர் திருச்சி அரசு சட்ட கல்லூரியில் படித்து வருகிறார். ராம்பிரசாத் ரம்யா என்பவரை 2 வருடமாக காதலித்து வந்துள்ளார். ரம்யா ஒருவகையில் ராம்பிரசாத்துக்கு சொந்தமாம்.

ரம்யாவின் எச்சரிக்கை
"கல்யாணம் பண்ணா உன்னதான் செய்வேன்" என்று 2 வருடங்களாகவே ராம்பிரசாத் ரம்யாவிடம் சொல்லி வந்திருக்கிறார். இதனை நம்பிய ரம்யாவும் அவரிடம் நெருங்கி பழக ஆரம்பித்தும், அனுமதித்தும் உள்ளார். இதனால் இருவருமே எல்லைமீறி நடந்து கொண்டுள்ளனர். இதனிடையே, ரம்யாவை காதலித்து வந்த ராம்பிரசாத், தன் காலேஜில் படிக்கும் இன்னொரு பெண்ணை விரும்ப ஆரம்பித்துள்ளார். இந்த விஷயம் ரம்யாவின் காதுகளுக்கு எட்ட, ரம்யாவோ கல்லூரிக்கே வந்து ராம்பிரசாத்தையும், அந்த பெண்ணையும் கண்டித்து எச்சரித்துவிட்டு போனார்.

புகார் செய்வேன்
ஆனாலும் ராம்பிரசாத் ரம்யாவை கல்யாணம் செய்து கொள்ளவே மாட்டேன் என பிடிவாதமாக இருந்தார். இதனை கண்ட திவ்யா 10 நாட்களுக்கு முன்பு, என்னை திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால் போலீசில் புகார் செய்வேன் என்றார். ஆனால் ராம் பிரசாத் கண்டு கொள்ளவில்லை.

தலைமறைவு
இதையடுத்து திவ்யா, திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இந்த தகவல் தெரிந்ததும் ராம்பிரசாத் தலைமறைவாகி விட்டார். இதனால் போலீசார் வலைவீசி தேடினர். ஆனால் கல்லூரிக்கு ராம்பிரசாத் மட்டும் வந்து போகிறார் என்ற தகவல் தெரிந்ததும், நேற்று மாலை கல்லூரி வாசலில் போலீசார் காத்திருந்தனர். அதன்படியே கல்லூரி முடித்து வெளியே வந்த ராம்பிரசாத்தை போலீசார் கைது செய்தனர்.

கடைசிவரை பிடிவாதம்
காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி அறிவுரை கூறியும், ரம்யாவை திருமணம் செய்துகொள்ளவே மாட்டேன் என்று ராம்பிரசாத் பிடிவாதமாகவே இருந்திருக்கிறார். இதனையடுத்து போலீசார் ராம்பிரசாத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் ரம்யாவையும் மருத்துவ பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications