Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஞ்சீபுரம் அருகே வேன் மீது பஸ் மோதல்: குழந்தை உள்பட 4 பேர் பலி; 14 பேர் படுகாயம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வேன் மீது பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 14 பேர் படுகாயமடைந்தனர்.

வேலூர் மாவட்டம் அரக் கோணம் தாலுகா கீழ் வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 55). இவரது மகளை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜசந்தோஷ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

முனுசாமி மகளின் குழந்தைக்கு நேற்று முதலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பேத்தியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்க முனுசாமி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு 2 வேன்களில் சித்தாத்தூர் சென்றார். அங்கு நேற்று மாலை பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழா முடிந்ததும் இரவு 10 மணி அளவில் அவர்கள் 2 வேன்களில் ஊர் திரும்பினார்கள். முதலில் புறப்பட்ட வேன் ஊருக்கு சென்று விட்டது. 2-வது புறப்பட்ட வேனில் 18 பேர் இருந்தனர். அந்த வேன் காஞ்சீபுரம் அடுத்த செவிலிமேடு பாலாற்று பாலம் மீது சென்றபோது டீசல் இல்லாமல் நின்றது. உடனே டிரைவர் அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்று டீசல் வாங்கி வந்து வேனில் ஊற்றினர். அதன் பிறகும் வேன் ஸ்டார்ட் ஆகவில்லை.

இதையடுத்து அருகேயுள்ள மெக்கானிக் கடைக்கு வேனை கொண்டு சென்று பழுது பார்த்து மீண்டும் புறப்படலாம் என்று முடிவு செய்தனர். வேனில் இருந்து 4 பேர் கீழே இறங்கி வேனை தள்ளினார்கள்.

மேம்பாலத்தில் இருட்டான இடத்தில் வேனை தள்ளிக்கொண்டு சென்றனர். அப்போது எதிரே வந்த தனியார் தொழிற்சாலை பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் வேன் மீது வேகமாக மோதியது. இதனால் வேன் நொறுங்கி 30 அடி தூரம் பின்னோக்கி தள்ளப்பட் டது.

இந்த விபத்தில் வேனில் இருந்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சிவா (28), சசிகுமார் (25) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி, அவரது தம்பியின் பேத்தி யோகலட்சுமி (3) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

மற்ற 14 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சபரி (25), சத்ரியன் (24) ஆகியோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் பற்றி அறிந்ததும் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி சிகிச்சை அளிக்கும் பணிகளை முடுக்கி விட்டார்.

வாய்க்காலுக்குள் பாய்ந்த கார்

இதேபோல் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த அம்மளுர் பாண்டிக்கோட்டகம் அருகில் வேளாங்கண்ணிக்கு சென்ற கார் வாய்க்காலுக்குள் பாய்ததில் ஒரு பெண் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வளவன்கோடு தாலுக்கா புதுக்கடையை அடுத்த அடைப்புவெளிவீடு கிராமத்தைச் சேர்ந்த சகாதேவன் (62) மற்றும் அவரது மனைவி சோபிகா (58) மருமகன் லெனின் ஆண்டனி (25) மகள் பொன்னி மரியாள் (20) பேத்தி மெர்சினி ஆண்டனி (2) ஆகியோர் வேளாங்கண்ணி வேண்டுதலுக்காக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை மருமகன் லெனின் ஆண்டனி ஓட்டிச் சென்றார். சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி அம்மளுர் பாண்டிக்கோட்டகம் அருகில் வந்துக் கொண்டிருந்த கார் திடீரென்று அங்கே இருந்த கோரையாறு பாலம் அருகில் உள்ள வாய்க்காலுக்குள் பாய்ந்தது. இதில் சகாதேவன் மனைவி சோபிகா சம்பவ இடத்தில் பலியானார்.

சகாதேவன் மருமகன் லெனின் ஆண்டனி மகள் பொன்னிமரியாள் பேத்தி மெர்சினி ஆண்டனி ஆகியோர் படுகாயம் ஏற்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+