சேலம் அருகே சோகம்.. லாரி மோதியதில் போலீஸ் ஏட்டு, மனைவி, மகன்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி
சேலம் அருகே லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
சேலம்: சேலம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் போலீஸ் ஏட்டு, அவருடைய மனைவி, மகன்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் வெங்கடேசன். இவர் தனது மனைவி சுகுணா(35), மற்றும் மகன்கள் ஜெய்ஹரி (8), தஷ்வந்த் (6) ஆகியோருடன் தனது சொந்த ஊரான கள்ளிக்காட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

இவரது இருசக்கர வாகனம் சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கச்சுபள்ளி, எட்டிகுட்டை மேடு பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற ஒரு காரை வெங்கடேசன் முந்தி செல்ல முயன்ற போது எதிரில் வந்த லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன், அவரது மனைவி சுகுணா, மகன்கள் ஜெய்ஹரி (8), தஷ்வந்த் (6) ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களது உடலை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும். இது குறித்து எடப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications