ரூ130 கோடி அபராதத்துக்காக போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு எஸ்டேட் உட்பட 211 சொத்துகள் முடக்கம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்டம் வீடு, கோடநாடு தேயிலைத் தோட்டம் உட்பட மொத்தம் 211 சொத்துகளை ரூ130 கோடி அபராதத்துக்காக முடக்கி வைக்க பெங்களூரு தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனையுடன் தலா ரூ10 கோடி (ரூ30) அபராதம் விதிக்கப்பட்டது.

இத்தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
- அரசுத் தரப்பில் வருமானத்துக்கு அதிகமாக ரூ66.65 கோடி சொத்து குவித்ததாக கூறப்பட்டது. ஆனால் ரூ53 கோடி அளவுக்கு சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
- எஞ்சிய ரூ13 கோடி சொத்து குவிப்புக்கான ஆதாரங்களை அரசுத் தரப்பு தாக்கல் செய்யவில்லை.
- ஊழல் தடுப்புச் சட்டம் 13(2) மற்றும் 13(1)(ஈ) ஆகிய பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 109ன் கீழும், 120ன் கீழும் குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
- ஜெயலலிதாவுக்கு 3 பிரிவுகளிலும் 4 ஆண்டுகள் சாதாரண சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- இதே பிரிவுகளின் கீழ் மற்ற மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சாதாரண சிறையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
- இந்த வழக்குக்காக தமிழக அரசு வழக்கு செலவாக ரூபாய் 5 கோடியை கர்நாடக அரசுக்கு தரவேண்டும்.
- மொத்தம் 130 கோடி ரூபாய் அபராதத்துக்காக, வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துகள் அனைத்தையும் நீதிமன்றம் முடக்கியுள்ளது
- அதாவது ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம் தொடங்கி கோடநாடு தேயிலைத் தோட்டம் உட்பட மொத்தம் 211 சொத்துகள் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
- தற்போது மொத்தம் ரூபாய் 130 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த தொகையை செலுத்தும் வரை இந்த 211 சொத்துகளையும் பறிமுதல் செய்து முடக்கி வைக்க இருக்கிறது நீதிமன்றம்.
- அதேபோல் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகள், முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள தொகை ஆகியவற்றிலிருந்தும் அபராத தொகை வசூலிக்கப்படும்
- அதுவும் போதவில்லையெனில் முடக்கப்பட்டுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் விற்கப்பட்டு அபராத தொகை ஈடுசெய்யப்படும்.
- சசிகலா, சுதாகரன், இளவரசிஆகிய மூவரும், கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்காக, '120 பி' பிரிவின் கீழ், தலா ஆறு மாதம் கூடுதல் சிறை தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பு.
- இந்த 6 மாத தண்டனையை ஏக காலத்தில் அதாவது 4 ஆண்டுகால காலத்துடன் இணைந்து அனுபவிக்க வேண்டும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications