ஃபாக்ஸ்கான் ஆலையை மூடுவதற்கு தடை: சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இயங்கி வந்த ஃபாக்ஸ்கான் ஆலையை மூடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த ஃபாக்ஸ்கான் ஆலை மூடுவதை எதிர்த்து அதன் 6 ஊழியர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசிடம் அனுமதி பெறாமல் ஃபாக்ஸ்கான் ஆலையை மூட நிர்வாகம் முயற்சிக்கிறது. எந்த வித நடைமுறையும் பின்பற்றாமல் ஆலையை மூடுவதற்கு நிர்வாகம் முயற்சிக்கிறது; அதனை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஃபாக்ஸ்கான் ஆலையை மூடுவது தொடர்பாக வரும் 15-ந் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும்; அதுவரை ஆலையை மூடக் கூடாது என்று இன்று இடைக்கால தடை விதித்தது.












Click it and Unblock the Notifications