இலவசமாய் வழங்கப்படும் பாடப்புத்தகங்களை இரக்கமில்லாமல் விற்கும் கடைகள்!

Subscribe to Oneindia Tamil

குன்னூர்: தமிழக அரசால் குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் இலவச பாடபுத்தகங்கள் கடைகளில் விலைக்கு விற்கப்படும் அவலம் நடைபெற்று வருகின்றது.

பல்வேறு மாவட்டங்களில் அரசின் இலவச பாடபுத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரியில் அமைந்துள்ள புத்தகக் கடைகளில் மூட்டை மூட்டையாக இலவச பாட புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து தகவல் கிடைத்ததும் குறிப்பிட்ட புத்தக கடைகளில் கல்வித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்காக, அரசால் வழங்கப்படும் இலவச பாட புத்தகங்கள் கடைகளில் குவிக்கப்பட்டிருந்தன.

அந்த புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ள "இலவசம் விற்பனைக்கு அல்ல" என்ற வார்த்தைகள் மறைக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இலவச பாடப்புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் நீலகிரி மாவட்டம் மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலும் இதேபோல் அரசின் இலவச பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

மேலும், சென்னையில் மாவட்ட வாரியாக இலவச பாட புத்தகங்கள் அனுப்பிய போதே இந்தக் குழப்படிகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரமாக ஆரம்பித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+