தமிழகமே வீதியில் இறங்கியது! அலங்காநல்லூர் அறவழிப்போர் மாணவர்கள் 240 பேரை விடுதலை செய்திடுக!!
அலங்காநல்லூர் அறவழிப் போர் மாணவரக்ள் 240 பேரை விடுதலை செய்யும் கோரிக்கை வலுத்து வருகிறது. 240 பேர் விடுதலைக்காக தமிழக நகரங்கள் போர்க்கோலம் பூண்டுள்ளன.
சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் முன்பாக 21 மணிநேரம் அறவழிப் போராட்டம் நடத்திய 240 மாணவர்கள் கைதைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமே வீதியில் களமிறங்கியது. 'மாணவர்களை விடுதலை செய் அல்லது எங்களையும் கைது செய்' என்ற தன்னெழுச்சி முழக்கம் தமிழகத்து நகரங்களை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தவர்கள் இப்படி ஒரு வரலாறு காணாத எழுச்சி தமிழகத்தில் ஏற்படும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்... ஒருநாள் அல்லது 2 நாள் போராடுவார்கள் என்றுதான் நினைப்பார்கள்.
இப்படி மனப்பால் குடித்தவர்களுக்கு சம்மட்டி அடி கொடுத்தது அலங்காநல்லூர் மண்... 21 மணிநேரம் கொட்டும் பனியில் வெட்ட வெளியில் விடிய விடிய அறவழி அமைதிப் போராட்டத்தை நூற்றுக்கணக்கான மாணவர்கள் முன்னெடுத்தனர்.

குண்டுகட்டாக கைது
இப்போராட்டத்துக்கு மதிப்பு தராத தமிழக அரசின் காவல்துறை இன்று காலை அந்த அறவழி தியாகச் செம்மல்களை குண்டுகட்டாக தூக்கிக் கொண்டு போய் மண்டபங்களில் அடைத்தது. அத்துடன் ஓய்ந்துவிடும் போராட்டம் என நினைத்தவர்கள் விக்கித்துப் போயுள்ளனர்.

மீண்டும் போர்க்கோலம்
அலங்கநால்லூர் மக்கள் கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்தனர்... தூக்கிக் கொண்டு போன மாணவர்களை திரும்பி கொண்டு வந்துவிடும் வரை நகரமாட்டோம் என வீதி மறியலில் இறங்கினர்.. 500க்கும் மேற்பட்ட பெண்கள் களத்துக்கு வர திகைத்துப் போனது போலீஸ்.

தன்னெழுச்சி போராட்டங்கள்
அலங்காநல்லூர் மண்ணில் இருந்து தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார்கள் இளைஞர்கள் என்ற செய்தி சட்டென காட்டுத் தீயாக பரவியது.. தமிழகத்தின் தலைநகர் சென்னை தொடங்கி தமிழகம் முழுவதும் பெரும் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்து கிளம்பியுள்ளன.

அதிர்ந்து போன அரசுகள்
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட 240 மாணவர்களையும் விடுதலை செய்; அல்லது எங்களையும் கைது செய் என்ற முழக்கத்துடன் வீதிகளில் இறங்கிவிட்டனர் இளைஞர்கள், மாணவர்கள். அரசியல் கட்சிகளின் தூண்டுதல் இல்லாமல் தாங்களே வீதிக்கு வந்த இந்த அறவழிப் போராட்டம் அரசாங்கங்களை அதிரவைத்திருக்கிறது.

விடுதலை செய்திடுக!
இளைஞர்களும் மாணவர்களும் பெண்களும் தமிழகத்தின் பண்பாட்டு அடையாள மீட்புக்கான களத்தில் முன்னணி தளபதிகளாக நிற்க அரசியல் கட்சிகளோ கையை பிசைந்து கொண்டு ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிற வரலாற்று சித்திரத்தை தமிழ் மண் இப்போது பார்த்து கொண்டிருக்கிறது. அலங்காநல்லூரில் அறவழியில் அமைதியாகப் போராடிய இளங்காளைகளை தமிழக அரசு விடுதலை செய்வதைத் தவிர வேறுவழியே இல்லை என்பதை பெருவெடிப்பாய் கிளம்பியுள்ள இப்போராட்டங்கள் வலியுறுத்துகின்றன.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications