செப்.4 முதல் தமிழ் திரைப்படங்கள் வெளியாகாது... தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
சென்னை : செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் எந்த தமிழ்த் திரைப்படமும் வெளியாகாது என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது...
'கோயம்பேட்டில் உள்ள திரையரங்கு உரிமையாளர் தன்னுடன் ஒரு தவறான கூட்டத்தை வைத்துக்கொண்டு, தொடர்ந்து தமிழ் சினிமாவை அழிக்கும் வேலை செய்துவருகிறார்.

இதன் தொடர்ச்சியாக 'பாயும்புலி' திரைப்படத்தை வெளியிடக்கூடாது என்று கட்டப்பஞ்சாயத்து செய்துவருகிறார். தங்களுக்கு ஒரு பெரும்தொகை தரவேண்டும் என்றும், அந்தத் தயாரிப்பாளரை மிரட்டி வருகிறார்.
இதனை கண்டிக்கும் வகையிலும், இதற்கு தீர்வு காணும் விதத்திலும் வருகிற 04.09.2015 முதல் அனைத்துத் திரைப்படங்களும் தமிழகம் முழுவதும் திரையிடுவதில்லை என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தமிழ் திரையுலகை மீட்டுத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, 'லிங்கா' விவகாரத்தில் இன்னும் பலரும் பணம் தரவேண்டியது இருப்பதால், வேந்தர் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 'பாயும் புலி' படத்துக்கு பல்வேறு ஏரியாக்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் தடை போட இருந்ததாக கூறப்பட்டது.
திரையரங்க உரிமையாளர் பன்னீர் செல்வம், விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஆகியோர் 'பாயும்புலி' திரைப்படம் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு மற்றும் நிர்வாகிகள், தயாரிப்பாளர்கள் சேர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு சென்று விநியோகஸ்தர் சிங்காரவேலன் மீது ஒரு புகார் மனு கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications