100 நாட்களில் 7வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு- ராமதாஸ் கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களின் பொருளாதார நெருக்கடியை உணராமல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தொடர்ந்து உயர்த்தி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, 15 நாட்களுக்கு ஒரு முறை எரிபொருட்கள் விலையில், எண்ணெய் நிறுவனங்கள் திருத்தம் செய்துவருகின்றன. அதன்படி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு முறையே 5 பைசாவும், ரூ.1.26-ம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வானது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

7வது முறை விலை உயர்வு

7வது முறை விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை உயர்த்தியுள்ளன. கடந்த 100 நாட்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழாவது விலை உயர்வு இதுவாகும். மக்களின் பொருளாதார நெருக்கடியை உணராமல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தொடர்ந்து உயர்த்தி வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ள விலை உயர்வின் காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 11 காசுகள் அதிகரித்து 65.15 ரூபாயாகவும், டீசல் விலை ரூ.1.34 அதிகரித்து 56.78 ரூபாயாகவும் உள்ளது.

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ற வகையில் தான் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், கடந்த 15 நாட்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கவில்லை. கடந்த மே மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த 15 நாட்களில் கச்சா எண்ணெயின் சராசரி விலை 46.53 டாலராக இருந்தது. ஜூன் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த 15 நாட்களில் கச்சா எண்ணெயின் சராசரி விலை 46.52 டாலராக உள்ளது. ஒப்பீட்டளவில் கடந்த 15 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 0.01 டாலர் குறைந்துள்ள நிலையில், அதற்கு மாறாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது எந்த வகையிலும் சரியல்ல.

விளக்கம் வேண்டும்

விளக்கம் வேண்டும்

கச்சா எண்ணெய் விலையில் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுவதாக வைத்துக் கொண்டால் இரு எரிபொருட்களின் விலைகளும் ஒரே அளவிலோ அல்லது ஒரே விகிதத்திலோ தான் உயர்த்தப்பட வேண்டும். ஆனால், பெட்ரோல் விலை வரிகளுடன் சேர்த்து 11 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ள நிலையில், டீசல் ரூ.1.34 உயர்த்தபட்டிருப்பது எந்த அடிப்படையில் என்பதை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் விளக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படாது

மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படாது

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது அதன் பயனை நாட்டு மக்களுக்கு அளிக்காமல், கடந்த 2014 நவம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி வரை பெட்ரோல் மீதான கலால் வரியை 9 தவணைகளில் லிட்டருக்கு 11.77 ரூபாயும், டீசல் மீதான வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1,46,838 கோடி கூடுதல் வருவாயை மத்திய அரசு தேடிக்கொண்டது. இப்போதும் கூட கலால் வரியை ஓரளவு குறைப்பதன் மூலம் இந்த விலை உயர்வை மத்திய அரசு தவிர்த்திருக்கலாம். இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக கிடைக்கும் வருவாய் 30 முதல் 40 விழுக்காடு வரை குறையுமே தவிர, எந்த வகையிலும் இழப்பு ஏற்பட்டுவிடாது.

பெட்ரோல் விலை ரூ.200​-ஐ தாண்டிவிடும்

பெட்ரோல் விலை ரூ.200​-ஐ தாண்டிவிடும்

பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இப்போது கடைபிடிக்கும் அணுகுமுறையை தொடர்ந்தால் மக்களால் சமாளிக்க முடியாத அளவுக்கு மோசமான நிலை ஏற்படும். உதாரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை எப்போதும் இருந்திராத அளவுக்கு ஒரு பீப்பாய் 147 அமெரிக்க டாலர் என்ற விலையை தொட்டது. அப்போது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73 என்ற அளவிலேயே இருந்தது. ஆனால், கச்சா எண்ணெய் விலை இப்போது அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக 46.52 டாலராக இருக்கும் போதே ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65.15க்கு விற்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை முந்தைய உச்சத்தை தொட்டால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.200-​ஐ தாண்டிவிடும்.

மக்கள் பாதிப்பு

மக்கள் பாதிப்பு

கடந்த 4 மாதங்களாக எரிபொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு அதிகருத்துள்ளன. இந்த நிலையில் பபெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். தக்காளி விலை ஏற்கனவே 100 ரூபாயை தாண்டி விட்ட நிலையில் அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கும். மற்ற காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் விலைகளும் அதிகரித்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும். இதை மனதில் கொண்டு பெட்ரோல், டீசல் விலைகளை முந்தைய நிலைக்கே குறைவதற்கு வசதியாக கடந்த சில ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட கலால் வரி உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+