அரசு மருத்துவமனை ஆபரேசன் தியேட்டர்களை மேம்படுத்த ரூ.20 கோடி: ஜெ. உத்தரவு
சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
"பல்வேறு நோய் சிகிச்சைகளுக்காக, அரசு மருத்துவமனைகளை நாடி வரும் பொதுமக்களுக்கு உயர்தர நவீன சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி சென்னை அரசு பொது மருத்துவமனையில் உள்ள 4 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 3 கோடி ரூபாய், ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள 10 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 3 கோடி ரூபாய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலுள்ள 8 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 2 கோடியே 50 லட்சம் ரூபாய், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள 2 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடியே 25 லட்சம் ரூபாய்,
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள 3 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடி ரூபாய், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள 2 அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த 1 கோடியே 25 லட்சம் ரூபாய் என 12 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளார்.
மேலும் பரமக்குடி, திருமங்கலம், சங்கரன்கோவில், அறந்தாங்கி, திருமயம், திருச்செந்தூர், பொள்ளாச்சி, அரக்கோணம், கள்ளக்குறிச்சி, குன்னூர், மன்னார்குடி, திருச்சி, திருச்செங்கோடு, பேரணாம்பட்டு, செய்யார், பென்னாகரம் ஆகிய 16 இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களை மேம்படுத்த ஒவ்வொரு மருத்துவமனைக்கும் 50 லட்சம் ரூபாய் என 8 கோடி ரூபாயும் என மொத்தம் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவை கிடைக்க வழிவகை ஏற்படும்" என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications