மீண்டும் காங்கிரசில் சேருவதைத் தவிர வாசனுக்கு வேறு வழியில்லை: திருநாவுக்கரசர்
ராமநாதபுரம்: ஜி.கே.வாசன் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வருவார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திருநாவுக்கரசர், மாவட்ட துணை தலைவர் செல்லத்துரை அப்துல்லா இல்ல வளாகத்தில் தொடங்கி வைத்து விண்ணப்பங்களை கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய திருநாவுக்கரசர் கூறியதாவது:-
''பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா போன்றோர் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை தேர்தலில் அறிவித்து ஆட்சிக்கு வந்தனர்.
தற்போது, இந்த ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதன் காரணமாக டெல்லியில் நடந்த தேர்தலில் பா.ஜ.க. மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.
ஜி.கே.வாசன் கட்சியை விட்டு வெளியேறியதால் காங்கிரசுக்கு எந்தவித பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், வாசன் காங்கிரசிலிருந்து விலகிச் சென்றுள்ளது தற்காலிகமானது தான். அவர், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பி வருவார். காங்கிரஸ் கட்சியில் சேருவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.
தேர்தல் அறிவிப்புக்கு பின் கூட்டணி குறித்து தலைமை முடிவு செய்யும். இலங்கை செல்லும் பிரதமர் மோடி மீனவர்கள் பிரச்சனையில் பேச்சுவார்த்தை மூலம் சரியான முடிவு எடுக்க வேண்டும். மீனவர்களை சுடுவதாக கூறிய இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்." என்றார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications