ஆர்.கே.நகரில் தினகரனுக்கு செக் வைக்க கங்கை அமரனே நல்ல சாய்ஸ்... 30-ல் தமிழக பாஜக ஆலோசனை
ஆர்கே நகரில் பாஜக வேட்பாளராக மீண்டும் கங்கை அமரனே களமிறக்கப்படுவார் என கூறப்படுகிறது.
சென்னை: ஆர்.கே. நகரில் தினகரனுக்கு செக் வைக்க கங்கை அமரன்தான் சரியான சாய்ஸ் என கூறி வருகிறதாம் தமிழக பாஜக.
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த முறை பாஜக வேட்பாளராக கங்கை அமரன் போட்டியிட்டார். தினகரன் குடும்பத்தின் சொத்து அபகரிப்பு வண்டவாளங்களை பிட்டு பிட்டு வைத்தார் கங்கை அமரன்.

கங்கை அமரனின் இந்த பேச்சு தினகரனுக்கு வந்து விழும் வாக்குகள் எண்ணிக்கையை குறைக்கும் என்பது பாஜகவின் வியூகமாக இருந்தது. இம்முறை பாஜகவின் திரைமறைவு தோழமை கட்சியான அதிமுக இரட்டை இலை சின்னத்துடன் களமிறங்குகிறது.
இரட்டை இலை சின்னத்துடன் வரும் வேட்பாளர் எப்படியாவது வெல்ல வேண்டும் என்கிற பெரும் முனைப்பு பாஜகவுக்கும் இருக்கிறது. இரட்டை இலைக்கு எதிராக தினகரன் களமிறங்குவதாக அறிவித்திருக்கிறார்.
ஆகையால் தினகரன் பக்கம் வாக்குகள் சேராமல் சிதறடிக்க கங்கை அமரனையே மீண்டும் களமிறக்கலாம் என தமிழக பாஜக தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். சென்னையில் வரும் 30-ந் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications