இளையராஜாவின் இசை அனைவருக்குமான மூச்சுக் காற்று.. தனி சொத்தாக்குவது வருத்தமளிக்கிறது.. கங்கை அமரன்
இளையராஜாவின் இசை அனைவருக்குமான மூச்சுக் காற்று என்று கங்கை அமரன் கூறியுள்ளார். அதனை தனிச் சொத்தாக்குவது வருத்தமளிக்கிறது என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை: இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்களை எஸ்.பி. பாலசுப்ரமணியன் மற்றும் சித்ரா, தன்னுடைய அனுமதி பெறாமல் பாடக் கூடாது என்று கூறியிருந்தார். மீறிப் பாடினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
இதுகுறித்து அவரது சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறியதாவது: நான் ஒரு இசை ரசிகன். என்னைப் பொருத்தவரை இளையராஜாவின் இசையை ஒரு வியாபாரமாக நாம் பார்க்கவில்லை.
நமக்கு சொந்தமாகக் கிடைக்கக் கூடிய மூச்சுக் காற்று போல நினைக்கிறோம். இளையராஜா பாடலை கேட்கும் போது மக்கள் சந்தோஷப்படுகிறார்கள். அதுதான் உண்மை.

எஸ்.பி.பி. குழுவில்…
இளையராஜா திடீரென பாடல்களை எஸ்.பி.பி. பாடக் கூடாது என்று சொன்னது கஷ்டமான ஒன்று. ஏனென்றால் எஸ்.பி. பாலசுப்ரமணியன் வைத்திருந்த கச்சேரிக் குழுதான், நான், அண்ணன் இளையராஜா, அண்ணன் பாஸ்கர் எல்லாம் சேர்ந்து வாத்தியக்காரர்களாக பணியாற்றினோம்.

தனிப்பட்ட முறையில்…
எஸ்.பி.பி நெருக்கமான நண்பர். உரிமம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பதால் பாட்டை மேடையில் பாடாதே என்று தனிப்பட்ட முறையில் இளையராஜா சொல்லி இருக்கலாம். எதற்காக நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டாம்.

தவிர்த்து..
ஏன் இதனை இவ்வளவு பெரிய பிரச்சனையாக மாற்ற வேண்டும் என்பதுதான் என் கேள்வி. இதனை தவிர்த்து இருக்கலாம். ஜேசுதாசோ, மனோவா, சித்ராவோ, பாலசுப்ரமணியமோ, மற்றவர்களோ என்னுடைய பாடல்களை மேடையில் பாடக் கூடாது என்று அவர் சொல்வதை யாராலும் ஒத்துக் கொள்ள முடியாது.
கெட்ட பெயர்
அவருடைய பாடல்களை எப்படி பாடாமல் இருக்க முடியும். எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை பாட யார் அழைத்தாலும் இளையராஜாவின் பாடலை பாடச் சொல்லி கேட்காமல் இருக்க மாட்டார்கள். அப்போது அவர் பாடத்தான் செய்வார். அதனால் இளையராஜா செய்தது தவறு. எனக்கு அதில் விருப்பம் இல்லை. அவருடைய பாடல்களை தனிச் சொத்தாக்கி மற்றவர்களை பாடக் கூடாது என்று சொல்வதே அவருக்கு ஒரு கெட்டப் பெயரை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று கங்கை அமரன் கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications