வாட்ஸ் ஆப்பில் குரூப் வைத்து கஞ்சா விற்கும் கும்பல்.. போலீஸ் ஷாக் தகவல்!
சென்னை: கஞ்சா விற்பனையில் பல புதுமைகளைப் புகுத்தி வருகிறார்களாம் கஞ்சா வியாபாரிகள். போலீஸார் இதை அம்பலப்படுத்தியுள்ளனர்.
கஞ்சா விற்பனையைத் தடுக்கவும் கஞ்சாவை ஒழிக்கவும் போலீஸார் என்னதான் செய்தாலும் புதுப் புது டெக்னிக்குகளைப் பயன்படுத்தி கஞ்சா விற்பனை நடந்து கொண்டுதான் உள்ளது.
பள்ளிக்கூடங்களுக்கு அருகிலேயே கஞ்சா விற்கின்றனர். கஞ்சா சாக்லேட் விவகாரம் பெரும் தலைவலியாகவே உள்ளது போலீஸாருக்கு. இந்த நிலையில் வாட்ஸ் ஆப் மூலமாக கஞ்சா விற்பன நடைபெறுவதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நவீன ரூட்டுகளில்
இப்போது பல்வேறு தொழில்நுட்பங்கள் வந்து விட்டதால் அதைப் பயன்படுத்தி தங்களது தொழிலை வித்தியாசமான முறையில் அபிவிருத்தி செய்து வருகிறார்கள் கஞ்சா வியாபாரிகள்.

வாட்ஸ் ஆப் குரூப்
பல கஞ்சா வியாபாரிகள் வாட்ஸ் ஆப்பில் குரூப் வைத்துள்ளனராம். அதில் தங்களது வாடிக்கையாளர்களை மட்டும் இணைத்துக் கொள்கின்றனராம்.

ஹோம் டெலிவரி
அந்த குரூப்பில் உள்ளவர்கள் தங்களுக்கு கஞ்சா தேவைப்படும்போது மெசேஜ் செய்தால் போதும், ஹோம் டெலிவரி செய்து விடுகிறார்களாம் கஞ்சா வியாபாரிகள்.

உறுப்பினர்களுக்கு மட்டுமே
இதில் தங்களது வாடிக்கையாளர்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் இந்த குரூப்பில் இடம் பெற முடியாதாம்.

இதுவரை 6000 கிலோ கஞ்சா பறிமுதல்
இந்த ஆண்டு மட்டும் இதுவரை சென்னையில் 6000 கிலோ கஞ்சாவைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கார், வேன், பஸ், ரயில் என பல ரூபங்களில் கடத்தி வரப்பட்டவை இவை.

செங்குன்றத்தில் சிக்கிய 200 கிலோ கஞ்சா
அதிகபட்சமாக கடந்த 27ம் தேதி செங்குன்றத்தில் சிக்கிய 200 கிலோ கஞ்சாவைச் சொல்லலாம். ஆந்திரப் பதிவெண் கொண்ட காரில் இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செங்குன்றத்தில் சிக்கிய 200 கிலோ கஞ்சா
அதிகபட்சமாக கடந்த 27ம் தேதி செங்குன்றத்தில் சிக்கிய 200 கிலோ கஞ்சாவைச் சொல்லலாம். ஆந்திரப் பதிவெண் கொண்ட காரில் இந்த கஞ்சா கடத்தி வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications