"சேரி பிஹேவியர்", "சீ".. "கண்றாவி".. 'பிக்பாஸ்' காயத்ரி அட்டகாசம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் முகத்தை சுளித்துக் கொண்டு அடுத்தவர்களை திட்டும் காயத்ரிக்கு சீ, சே தவிர வேறு எதுவுமே தெரியாதா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்து இன்று வெளியாகியுள்ள ப்ரமோ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேரி பிஹேவியர் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர் காயத்ரி ரகுராகுமக்கு சீ, சே போன்ற பேச்சுகளைத் தவிர வேறு எதுவுமே தெரியாதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ப்ரமோ.

விஜய் டிவிய் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது அநாகரீக பேச்சிற்காக சர்ச்சையில் சிக்குபவர் என்றால் அது காயத்ரியாகத் தான் இருக்கும். சக போட்டியாளரான ஓவியாவை பார்த்து சேரி பிஹேவியர் எனக்கூறி சர்ச்சையில் சிக்கினார். அடுத்தது பரணி வெளியேற்றப்பட்ட போது பரணியை விட கஞ்சா கருப்பு கேவலமானவரா என்று ஓவியாவிடம் வரிந்து கட்டி சண்டைபோட்டார்.

தொடர்ந்து"சேரி பிஹேவியர்", கேவலம் என்றே பேசி வரும் காயத்ரிக்கு அநாகரீக பேச்சு மொழிதான் பழக்கம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது இன்றைய ப்ரமோ. பிக்பாஸ் கூத்துல இன்று வெளியாகவுள்ள எபிசோட் குறித்து வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் காயத்ரி ரகுராம், நமீதா, ரைசா உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க , ஜூலி அருகில் அமர்ந்திருக்கிறார்.

நமீதா கோபம்

நமீதா கோபம்

அப்போது நமீதா, ஜூலியைப் பார்த்து ஏன் இதெல்லாம் நடக்குது, நீ ஏன் நடிக்கிற, நீ வெற்றி பெற நினைக்கிறியா என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஜூலி வலிக்கிறது என்று சொல்லி கண்ணீர் விடுகிறார். அப்போது சினேகன், சக்தி, கணேஷ் பதறியடித்து ஓடி வருகின்றன.

அசால்ட்டா இருக்கும் ரைசா

அசால்ட்டா இருக்கும் ரைசா

மத்தவங்கலாம் பதறி ஓடுனாலும் பக்கத்திலேயே உட்கார்ந்திருக்கும் ரைசா பயப்படுவது போல ரியாக்ஷன் கொடுத்து விட்டு சாப்பிட்டுக் கொண்டு காயத்ரி, வையாபுரியிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கொப்பளிக்கும் காயத்ரி

கொப்பளிக்கும் காயத்ரி

ஜூலியை சினேகன் அலேக்காக தூக்கிக் கொண்டு சோபாவில் படுக்க வைக்கிறார். இதனைப் பார்த்த காயத்ரி அவ சும்மா டிராம் பண்றா என்று சொல்வதோடு "சீ" கண்றாவி என்று சொல்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

என்னாச்சு ஜூலிக்கு

என்னாச்சு ஜூலிக்கு

அடுத்த சீன்ல பார்த்தா ஜூலிக்கு மூச்சுத் திணறல் போல காட்டுகிறார்கள். சக்தியும், கணேசும் பிக் பாஸ் கேமரா முன்னாடி உதவி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வேற தெரியாதா?

இந்த ப்ரமோவில கவனிக்கப்பட வேண்டிய விஷயம்னு பார்ததா, பிக்பாஸ்ல நடக்குறதெல்லாம் ஸ்கிரிப்ட் பண்ணது தான் என்று ஒரு பக்கம் சொல்லிகிட்டு இருக்காங்க. அதுக்கு ஏற்றாற் போல காயத்ரியும் டிராமா பண்றா ஜூலி என்று சொல்கிறார். மற்றொரு விஷயம் என்னான்னா காயத்ரிக்கு சேரி பிஹேவியர், கேவலம், சீ, கண்றாவி இதைத் தவிர நாகரீகமா பேசவேத் தெரியாதா என்பது தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+