சென்னை குண்டுவெடிப்பு குறித்த புதிய துப்பு கிடைத்துள்ளது: டிஜிபி தகவல்
சென்னை: சென்னை குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய துப்பு கிடைத்துள்ளதாக டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
மேலும், குண்டு வெடித்த பெட்டிகளில் பயணம் செய்த மற்ற பயணிகளின் உதவியோடு குண்டு வைத்த தீவிரவாதிகள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற அனுமானத்தில் போலீஸ் கம்யூட்டர் வரைபடம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது.
நேற்று காலை சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் நின்றிருந்த கவுகாத்தி ரயிலில் எஸ் 4 மற்றும் எஸ் 5 பெட்டிகளில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் பரிதாபமாக பலியானார். மேலும், காயமடைந்த 14க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் குண்டு வெடித்த இரண்டு பெட்டிகளிலும் நான்கு பேர் கையில் பையோடு ஏறியது சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே பெட்டியில் பயணம் செய்த மற்றப் பயணிகள் மேலும் பல தகவல்களை அளித்துள்ளனர்.
அதனடிப்படையில், போலீசார் கம்யூட்டர் உதவியோடு குற்றவாளிகளின் உருவ வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். அவற்றை தமிழகம் முழுவதும் அனுப்பி விசாரணை மேற்கொள்கின்றனர்.
இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. அனூப் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-

துப்பு துலங்கியுள்ளது...
இந்த குண்டு வெடிப்பு வழக்கு மிகவும் சிரமமானது அல்ல. சில வழிகளில் இதில் துப்பு துலங்கி விட்டது.

தமிழக போலீசார்...
எனவே தமிழக போலீசாரே தாமாகவே இந்த வழக்கு விசாரணையை தன்னிச்சையாக நடத்தி முடிக்க முடியும்.

தீவிரவாதிகளின் முகம்...
குண்டு வைத்த தீவிரவாதிகளை சில பயணிகள் நன்றாக பார்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ள காட்சிகள் அடிப்படையில் தீவிரவாதிகள் முகம் வரையப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்...
அந்த கம்ப்யூட்டர் படத்தை வைத்து தீவிரவாதிகளை தேடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. அந்த கம்ப்யூட்டர் படத்தை தமிழகம் முழுவதும் அனுப்பியுள்ளோம்.

அடுத்த கட்டம்...
இதன் முலம் எங்களது விசாரணை விரைவில் அடுத்தக் கட்டத்துக்கு நகரும் என்று எதிர் பார்க்கிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications