பழிவாங்கும் பாம்பு.. கட்டிப்போடப்பட்ட பேய் ... வீட்டுக்குள் உலா வரும் தீய சக்திகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாம்புகள் ஒருபக்கம் படமெடுத்து ஆட, பேய்கள் ஒரு பக்கம் மிரட்ட. மந்திரவாதிகள் ரத்தக்களறியோடு மந்திர உச்சாடனம் செய்ய மிரண்டு கிடக்கிறார்கள் இல்லத்தரசிகள். மாலை நேரமானாலே வீட்டிற்குள் தீய சக்திகள் உலா வரத் தொடங்கியுள்ளன.

சன் டிவியில் நாகினி தொடங்கி நந்தினி வரை பாம்புகளின் ஆதிக்கமாக உள்ளது. கூடவே பேய்களும், தீய சக்திகளும் இப்போது இணைந்து கொண்டன.

டிவி சீரியல் பார்த்து குடம் குடமாய் அழுது தீர்த்த இல்லத்தரசிகளும் இப்போது பாம்பு, பேய்களின் ரசிகையாகி விட்டார்கள். இதை உணர்ந்துதான் காலை 10 மணிக்கு மறு ஒளிபரப்பாக உலா வருகிறது நந்தினி.

நந்தினி யார்

நந்தினி யார்

விஜயகுமார் குடும்பத்தோடு வசிக்கும் அரண்மனையின் முன்பு உள்ள புற்றில் வசிக்கும் பாம்பின் பெயர்தான் நந்தினி. இந்த நந்தினி பாம்பு இப்போது வெளியே வந்து விஜயகுமாரின் மருமகள் கங்காவின் உடம்பில் புகுந்து கொள்ள, பாம்பின் சீற்றம் ஆரம்பமாகி விட்டது.

மரத்தில் தொங்கும் பேய்

மரத்தில் தொங்கும் பேய்

விஜயகுமாரின் இறந்து போன மருமகள், பேயாக மாறியிருக்க, வீட்டிற்குள் வந்த தீய சக்தி காயத்ரி, அதை கட்டிப்போட்டு மரத்தில் கட்டி விட்டிருக்கிறாள். அது எப்போது வெளியே வரப்போகிறதோ என்ற திகிலில் மரத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

நம்பூதிரியின் உச்சாடனம்

நம்பூதிரியின் உச்சாடனம்

பாம்பும், பேயும் ஒரு பக்கம் உலா வர, வீட்டிற்குள் இருக்கும் தீய சக்தியை கண்டு பிடிக்க ருத்ராட்ச மாலையுடன் உலா வருகிறார். அதைப் பார்த்த சச்சு, ஓரு தீய சக்தியே தீய சக்தியை கண்டுபிடிக்க மாலையை எடுத்துட்டு வருதே என்று கேட்பது செம.

காலை உடைத்துக்கொண்ட காயத்ரி

காலை உடைத்துக்கொண்ட காயத்ரி

தீய சக்தி அறைக்குள் இருப்பதை அறிந்து கொண்ட நம்பூதிரி செல்ல, ஜன்னல் வழியாக குதித்து காலை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்கிறார் காயத்ரி. ஏய் இந்த தீய சக்தி இப்போதான் தப்பிச்சு போயிருச்சே என்று நம்பூதிரி கூற அதிர்ச்சியடைகிறார் விஜயகுமார்.

பழிவாங்கத் துடிக்கும் பாம்பு

பழிவாங்கத் துடிக்கும் பாம்பு

நந்தினி பாம்பு பழிவாங்கத் துடிக்கிறது. விஜயகுமார், அவரது நண்பர், கூட இருக்கும் நம்பூதிரி, இவர்கள் மூவருமே இணைந்து என்ன செய்தார்கள். பாம்பை எரித்து விட்டார்கள். நந்தினிக்கு நெருப்பு என்றால் பயமாக இருப்பது ஏன்? பாம்பு பழிவாங்குமா? என்ற பல கேள்விகளுக்கு பதில் தர உள்ளது சன் டிவியின் நந்தினி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Nowdays Ghosts and bad elements are ruling the TV Serials in Tamil channels
Please Wait while comments are loading...