காதலன் வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட காதலி: உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோட்டில் காதலனின் வீட்டின் முன் கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடலை வங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சித்தோடு - ஈரோடு பிரதான சாலையில் உள்ள சொட்டையம்பாளையம் ரெவின்யூ காலனி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன் மகன் ரகுநாத்.

இவரும், அதே பகுதியை சேர்ந்த சலூன் கடை நடத்திவரும் ராமசாமி என்பவரின் மகள் சத்யபிரியாவும் காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள்.

திருமண உறுதி:

கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும், பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். நெருக்கமாக பழகிய சத்யபிரியாவை ரகுநாத் திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறியுள்ளார்.

கழற்றிவிட முடிவு:

இதை உண்மையென நம்பிய சத்யபிரியா ரகுநாத்துடன் உடலுறவும் வைத்துக்கொண்டதாக கூறப்படு கிறது. பிறகு, சத்யபிரியாவை கழற்றி விட நினைத்த ரகுநாத், அவர் போன் செய்தால் பதில் கூறாமல் இருந்துள்ளார்.

போலீஸில் மனு:

இதுகுறித்து, சத்யபிரயா கடந்த மார்ச் 31 ஆம் தேதி, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் தனது காதலன் ரகுநாத்தை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனக்கேட்டு மனு கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் நடந்த விசாரனையில் கலந்துகொண்ட இரு தரப்பினரும் உள்ளூரிலேயே பேசி முடித்துக் கொள்வதாக சமாதானம் பேசியுள்ளனர்.

சத்யபிரியா போராட்டம்:

அனால், அதற்கு பிறகும், ரகுநாத் சத்யபிரியாவை ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் ரகுநாத் வீட்டுக்கு சென்ற சத்யபிரியா அவரை சந்தித்து, தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தவறினால், என்னோடு உறவு வைத்த விவகாரத்தை போலீஸில் கூறி பாலியல் வழக்கு போன்ற நடவடிக்கை எடுப்பேன் என கூறியதாக தெரிகிறது.

அரிவாளால் கொலை:

அபோது, ரகுநாத் சத்யபிரியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த ரகுநாத்தின் தந்தை ஈஸ்வரன் , வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து, சத்யபிரியாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

சம்பவ இடத்திலேயே இறப்பு:

படுகாயாமடைந்த சத்யபிரியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சத்யபிரியாவின் உடலை அங்கேயே போட்டு விட்டு, ஈஸ்வரன், ரகுநாத் இருவரும் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து பெருந்துறை டி.எஸ்.பி., பாஸ்கரன், சித்தோடு இன்ஸ்பெக்டர் தனராஜ் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வழக்கு பதிவு:

மேலும் நேரில் சென்று தகராறு செய்ததால், அத்திரத்தில் இக்கொலை நடந்துள்ளது என்பதை உறுதிப் படுத்திய போலீஸார், ரகுநாத் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து ரகுநாத்தின் தந்தை ஈஸ்வரனை கைது செய்தனர்.

உறவினர்கள் கோரிக்கை:

இந்நிலையில், நேற்று சத்யபிரியாவின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடந்தது. அப்போது ரகுநாத் மீதும் வழக்கு பதிவு செய்து அவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என சத்யபிரியாவின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது தான் சத்தியபி ரியாவின் உடலை பெற்றுக்கொள்வோம் என்றனர்.

போலீஸார் சமாதானம்:

இதுகுறித்து போலீஸார், இரவுக்குள் ரகுநாத்தை கைது செய்து விடுவோம். இதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என உறுதியளித்ததால் சமாதானம் அடைந்த உறவினர்கள் சத்யபிரியாவின் உடலை பெற்றுச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+