வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவியை தூக்கிச் சென்று சீரழித்த இளநீர் வியாபாரி
தர்மபுரி: தர்மபுரியில் 9ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளநீர் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டொக்கு போதனஹள்ளியைச் சேர்ந்தவர் ராசு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரின் 14 வயது மகள் பிரியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிரியா அருகில் இருக்கும் பூவல்மடுவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை வேளையில் பிரியா வீட்டில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளநீர் வியாபாரி வெள்ளயங்கிரி(28) பிரியாவை வீட்டுக்கு பின்னால் இருக்கும் கரடு பகுதிக்கு வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றார். அங்கு வைத்து அவர் பிரியாவை பாலியல் பலாத்காரம் செய்தார்.
சம்பவம் நடந்த இரவு பிரியா தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராசு இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வெள்ளயங்கிரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications