ஈரோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: போஸ்கோ சட்டத்தில் ஓட்டுனர் கைது!

Posted By: staff
Subscribe to Oneindia Tamil
  சிறுமிக்கு பாலியல் தொல்லை | லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்!- வீடியோ

  ஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓட்டுனர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  நாமக்கல் மாவட்டம் ஓடைப்பள்ளத்தை சேர்ந்த ஓட்டுனர் அருண் என்ற தேவேந்திரன். இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வசித்து வருகிறார்.

  Girl Sexually Harassed By The Driver Near Erode

  இந்த நிலையில் தான்வசிக்கும் பகுதியில் உள்ள சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் இதனை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  இதன் அடிப்படையில் பாலியல் தொல்லையிலிருந்து குழந்தைகளை பாதுகாத்தல் போஸ்கோ 2012 மற்றும் கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அருண் என்ற தேவேந்திரனை கைது செய்தனர். இதனையடுத்து தீவிர விசாரணைக்கு பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறைகாவலுக்கு அனுப்பி வைத்தனர். போஸ்கோ சட்டத்தில் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The girl was sexually harassed by the driver in the area near Erode. He also threatened to kill her if he said it out. The girl's parents have complained to Erode at all women's police station. Based on this, the police arrested the driver.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற