காதலிக்க மறுத்த மாணவி.. பாட்டிலை உடைத்து கழுத்தில் குத்து.. பல்கலைக்கழகத்தில் என்ஜினியர் வெறிச்செயல்
காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை பாட்டிலை உடைத்து குத்தி என்ஜினியர் வெறிச்செயலில் ஈடுபட்டார்.
கோவை: ஒருதலையாக காதலித்த என்ஜினியர், காதலிக்க மறுத்த மாணவியை பல்கலைக்கழகத்தில் வைத்து பாட்டிலில் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை டவுன்ஹால் உப்பாரவீதியை வசித்து வருபவர் மாடசாமி. இவருக்கு 21 வயதில் கனகலட்சுமி என்ற மகள் இருக்கிறார். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறார்.

இவருக்கு 28 வயதான வேம்புராஜ் என்பவர் பேஸ்புக்கில் அறிமுகமாகி இருக்கிறார். தேனி மாவட்டம் முதுகுளத்தூர் அருகில் உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவரான வேம்புராஜ், கனகலட்சுமியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர், அவரை காதலிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறார்.
இதனை கனகலட்சுமி கடுமையாக எதிர்த்துள்ளார். ஆனால், கனகலட்சுமியின் செல்போன் எண்ணை தெரிந்து கொண்ட வேம்புராஜ் தொடர்ந்து அவருக்கு போன் செய்து டார்ச்சர் செய்துள்ளார். மாணவி செல்போன் எண்ணை மாற்றினாலும், எப்படியாவது வேம்புராஜ் புதிய எண்ணை கண்டுபிடித்து போன் செய்து தொந்தரவு தருவது வாடிக்கையாக மாறிவிட்டது.
இதனால் கடுப்பாகிப் போனி கனகலட்சுமி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியிருக்கிறார். அவரது பெற்றோரும் வேம்புராஜை நேரில் சந்தித்து இந்த விவகாரத்தை இத்தோடு முடித்துக் கொள்ளும்படி கூறியுள்ளனர்.
ஆனாலும், அதனை மதிக்காமல் வேம்புராஜ் கனகலட்சுமியின் பல்கலைக்கழகத்திற்கே வந்து பார்த்து தொந்தரவு கொடுப்பது தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், நேற்று கோவைக்கு வந்து பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு சென்ற வேம்புராஜ் கனகலட்சுமியை சந்தித்துள்ளார். அப்போது அவர் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும் கேட்டுள்ளார். இதற்கு கனகலட்சுமி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேம்புராஜ் தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை எடுத்து உடைத்து கனகலட்சுமியின் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். கனகலட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதனை பார்த்த சக மாணவிகள் கதறி கூச்சல் போட்டனர். இதனைக் கண்ட வேம்புராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை, சக மாணவிகள் வடவள்ளிப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கோவை சிறுவாணி சாலையில் பதுங்கி இருந்த வேம்புராஜ் போலீசாரிடம் சிக்கினார். பின்னர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வேம்புராஜ், சிறையில் அடைக்கப்பட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications