+2 தேர்வில் தோல்வி.. கள்ளக்குறிச்சியில் கிணற்றில் குதித்து மாணவி தற்கொலை!
கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலை!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்த மாணவி இளமதி. இவர் அங்கிருந்த அரசு பள்ளியில் +2.தேர்வு எழுதிய நிலையில், அதற்கான முடிவுகளும் நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது.

இந்த தேர்வு முடிவில் மாணவி இளமதி தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இளமதி, மனம் உடைந்து காணப்பட்டார். பின்னர் சோகம் தாளாமல் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார், மாணவி சடலத்தை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவி பலியானதால் நல்லாத்தூர் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications