+2 தேர்வு முடிவுகள்... வழக்கம் போல் மாணவர்களை தூக்கிச் சாப்பிட்ட மாணவிகள்
Subscribe to Oneindia Tamil

பிளஸ்-2 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வை 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ - மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனரகத்தில் வெளியிடப்பட்டது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி சுசாந்தி 1193 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.
அதற்கு அடுத்த இடத்தில் தர்மபுரி மாணவி அலமேலு 1192 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடத்தையும், 1191 மதிப்பெண்களுடன் நாமக்கல் துளசிராஜன், சென்னை மடிப்பாக்கம் நித்யா 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
மொத்தம் 90.06 சதவீதம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் தேர்வாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications