4887 விருப்ப மனுக்கள்.. நேர்காணலைத் தொடங்கினார் ஜி.கே.வாசன்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி மனு கொடுத்துள்ளவர்களிடம் அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேர்காணலைத் தொடங்கினார்.
சட்டசபைத் தேர்தலில் தமாகாவும் போட்டியிடவுள்ளது. புதிதாகப் பிறந்த கட்சி என்றாலும் கூட இக்கட்சியிலும் தேர்தலில் போட்டியிட தொண்டர்களிடையே நல்ல ஆதரவு உள்ளது.

எந்தக் கூட்டணியில் தமாகா சேரப் போகிறது என்பது தெரியவில்லை என்ற போதிலும் மொத்தம் 4887 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
இதையடுத்து இன்று சென்னை தி.நகரில் உள்ள கல்யாண் மண்டபத்தில் இன்று நேர்காணலைத் தொடங்கினார் ஜி.கே.வாசன். 27ம் தேதி வரை இது நடைபெறவுள்ளது.
முதல் நாளான இன்று காலையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளிடம் ஜி.கே.வாசன் நேர்காணல் நடத்தினார். பிற்பகல் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
அப்போது தொகுதி நிலவரம், தமாகாவின் நிலை, மற்ற கட்சிகளுக்கு வாய்ப்பு, சீட் கொடுத்தால் ஜெயிக்க முடியுமா என்பது உள்ளிட்ட கேள்விகளை அவர் கேட்டறிந்தார்.
நேர்காணலின்போது மூத்த தலைவர்கள் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications