ரஜினி கூறியதை அப்படியே பேசி வாக்கு சேகரித்த ஜி.கே. வாசன்

Subscribe to Oneindia Tamil

தேனி: 1996ம் ஆண்டு தேர்தலின்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய அதே வார்த்தையை கூறி வாக்கு சேகரித்தார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். ரஜினி என்ன கூறினார் என்பது தமிழகம் அறிந்த செய்தி.

தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தேனியில் பிரச்சாரம் செய்தார். தேனி, அல்லிநகரம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய இடங்களில் அவர் வாக்கு சேகரித்தார்.

அல்லிநகரத்தில் வாக்கு சேகரிக்கையில் அவர் கூறுகையில்,

தேர்தல்

தேர்தல்

மே மாதம் நடக்க உள்ள சட்டசபை தேர்தல் அதிமுக, திமுகவை மாற்றக்கூடிய வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல் ஆகும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிமுகவும், திமுகவும் மக்களை விலைக்கு வாங்கி அவர்களின் வரிப் பணத்தை சுரண்டும் நிலை மாற வேண்டும்.

மக்கள் ஆட்சி

மக்கள் ஆட்சி

தமிழக மக்களுக்கு வெளிப்படையான, எளிமையான ஆட்சி தேவைப்படுகிறது. மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் அப்பழுக்கற்றவர்கள். அவர்களால் தான் மக்கள் ஆட்சியை அளிக்க முடியும்.

ஊழல்

ஊழல்

தமிழகத்தில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும். அதிமுக, திமுகவால் தமிழகத்தில் மதுவை ஒழிக்க முடியாது. அதை நல்லவர்களால் தான் செய்ய முடியும். ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள். தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிக் காட்டுகிறோம் பாருங்கள்.

காப்பாற்ற முடியாது

வரும் தேர்தலில் உங்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பை தவறவிட்டீர்கள் எனில் இனி ஆண்டவனே நினைத்தாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது. எனவே, எங்கள் கூட்டணிக்கு வாக்களித்து ஒரு வாய்ப்பை அளித்துப் பாருங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+