ஆடி வரும் பின்னே... ”ஆடு” விலை ஏறும் முன்னே...!
சென்னை: ஆடி மாதம் நெருங்கி வருவதால் ஆடுகளுக்கான கிராக்கி பெருமளவில் சந்தையில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
தமிழ் மாதமான ஆடியில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், நேர்த்திகடன் செலுத்தும் வகையில் ஆடு, கோழிகளை பலி கொடுப்பதையும், கோயில்களுக்கு நேர்ந்துவிடுவதையும் பக்தர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
எனவே, இந்த மாதத்தில் ஆடு மற்றும் கோழிகளின் விலை பல ஆயிரம் ரூபாய்களை கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

விடாமல் படையெடுக்கும் மக்கள்
அப்படியும் சில பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை வாங்க அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு படையெடுக்கின்றனர். காரணம், விலை குறைவு மற்றும் நோய் இல்லாமல் இருக்கும் என்பதே.

ஆடி விழா ஏற்பாடுகள் தீவிரம்
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் ஆடி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அட்வான்ஸ் கொடுத்து ஆடு புக்கிங்
எனவே, நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் இப்போதே ஆடு, கோழிகளுக்கு டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து வைத்துள்ளனர். பலி அல்லது நேந்துவிடுவதற்கான விழாவின் போது அவற்றின் விலை அதிகரிக்கலாம் என்பதால் பக்தர்கள் இப்படி முன்னெச்சரிக்கையாக செயல்படுகின்றனர்.

போட்டா போட்டி
ஆடுகளை பக்தர்கள், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்குவதால், அதற்கேற்ப விலையும் அதிகரிக்கும். வரும் 17 ஆம் தேதி ஆடி மாதப்பிறப்பு என்பதால் அன்றைய தினமே பெரும்பாலான பக்தர்கள் கோயில்களில் ஆடுகளை பலியிட்டு வேண்டுதல் நிறைவேற்றுவர்.

அதிகபட்சம் ரூ. 9000 வரை
இதனால் ஆடுகள் அதிகபட்சமாக ரூபாய் 9,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதற்கு முன்பு வெறும் 4 ஆயிரம் முதல் இந்த ஆடுகள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications