கோகுல்ராஜ் கொலைவழக்கில் தேடப்படும் குற்றவாளி யுவராஜ் கோர்ட்டில் சரண்டர்?
சென்னை: ஓமலூர் பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ், சில மாதங்களுக்கு முன் நாமக்கல் திருச்செங்கோடு அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார்.
கோகுல்ராஜும் நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். சம்பவ நாளன்று கோகுல்ராஜும் அந்த பெண்ணும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாதீஸ்வரர் கோவிலில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது காரில் வந்த ஒரு கும்பல் கோகுல்ராஜை கடத்திச் சென்றது. இந்த காட்சிகள் அந்த கோவிலின் சிசி டிவியில் பதிவாகி உள்ளன.
மேலும் கோகுல்ராஜ் கடத்தப்பட்டதை அந்த பெண்ணே தம் நண்பர்களிடத்தில் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து கோகுல்ராஜை தேடியபோதுதான் அவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார்.

குற்றவாளி யுவராஜ்
கோகுல்ராஜூம் அவர் காதலித்த பெண்ணும் வெவ்வேறு ஜாதி. நாமக்கல் சுற்றுவட்டாரத்தில் ஜாதி மறுப்பு காதல் திருமணங்களை ஏற்காத தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் யுவராஜ் காதலர்களை பிரிப்பதை வாடிக்கையாக கொண்டவர்; அவர்தான் அடியாட்கள் மூலமாக கோகுல்ராஜை கடத்திச் சென்று கொலை செய்துவிட்டார் என்பது உறவினர்களின் குற்றச்சாட்டு.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் போராட்டத்தில் குதித்தன. இதனைத் தொடர்ந்து யுவராஜ் தலைமறைவாகிவிட்டார். அவர் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டார்.

விஷ்ணுபிரியா தற்கொலை
ஆனாலும் வாட்ஸ் அப் மூலமாக அவ்வப்போது யுவராஜ் போலீசாருக்கு சவால்விட்டுக் கொண்டு ஆடியோ பதிவுகளை அனுப்பிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில்தான் இந்த வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலைக்கு காரணமே, தலைமறைவான யுவராஜை அவர் பலமுறை நெருங்கியதாகவும் ஆனால் மேலதிகாரிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

வாட்ஸ் அப் தகவல்
அத்துடன் விஷ்ணுபிரியா விவகாரத்திலும் தலைமறைவு குற்றவாளி யுவராஜ், வழக்கம் போல வாட்ஸ் அப் மூலமாக சில தகவல்களை கூறியிருக்கிறார். அதில்,யார் என்ன விதமான கதைகள், காரணங்கள் கட்டினாலும் உயர் அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக, ஜனநாயகத்திற்கு விரோதமாக தன்னை செயல்பட வற்புறுத்தி தந்த மன உளைச்சலும், ஒரு பெண் என்றும் பாராமல் பேசப்பட்ட வார்த்தைகளுமே டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா அவர்கள் தற்கொலை முடிவெடுக்க காரணம் என்பது சத்தியமான உண்மை. (இதற்கான ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது) என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் "கோகுல்ராஜ் கொலை வழக்கினை எவ்வித சமரச மில்லாமல் காவல்துறை நடத்தட்டும், நான் குற்றவாளி என நிரூபித்தால் மறு பேச்சின்றி மரணதண்டனையை ஏற்க எப்போதும் நான் தயாராக இருக்கின்றேன். ஆனால் அப்பாவி பெண்ணை மன உளைச்சல் படுத்தி கொன்று அவரது குடும்பத்தாரை சிதைக்க காரணமான காவல்துறை அதிகாரிகளை, இவர்களை ஏவிய அரசியல்வாதிகளை யார் தண்டிப்பது? என்றும் யுவராஜ் கேள்வி எழுப்பியிருந்தார்.

யுவராஜ் கைது? சரண்டர்?
இதனிடையே புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேற்று இரவு நடத்தப்பட்ட 'நேர்பட பேசு'விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி சித்தண்ணன், யுவராஜ் கைது செய்யப்பட்டுவிட்டார்; காலையில் பத்திரிகைகளைப் பாருங்கள் என்று குண்டைத் தூக்கிப் போட்டார். இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நெறியாளர் குணசேகரன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் அதிர்ச்சி அடைந்து யுவராஜை எங்கே கைது செய்தார்கள் என கேள்வி கேட்க திணறிப் போன அந்த அதிகாரி, யுவராஜை நெருங்கிவிட்டது போலீஸ்.. அவர் கைது செய்யப்பட்டுவிடுவார் என்ற பல்டியும் அடித்திருந்தார்.
இந்நிலையில்தான் நீதிமன்றம் ஒன்றில் யுவராஜ் சரணடைந்துவிட்டதாக காவல்துறை வட்டாரங்கள் கூறி வருகின்றன. இருப்பினும் எந்த நீதிமன்றத்தில் யுவராஜ் சரணடைந்தார்? என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications