சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கம், வைரம், பிளாட்டினம் பறிமுதல்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த மே 1ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்புக்குப் பின்னர், ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், வசுந்தராஜ் என்பவர் கொண்டு வந்த பையில், மூன்றரை கிலோவுக்கும் அதிகமான தங்கம், 405 கிராம் வைரம், 300 கிராம் பிளாட்டினம் என பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையின் போது, தாம் ஒரு நகை விற்பனையாளர் என்றும், தங்கம், வைரம் ஆகியவற்றை திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார்.
எனினும், அதற்கான ஆவணங்கள் இல்லாததால், தங்கம் மற்றும் வைரத்தை பறிமுதல் செய்த ரயில்வே காவல்துறையினர், அதனை வருவாய் குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை வசம் ஒப்படைத்தனர்.
இதேபோல் ரயில்வே நடைமேடையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை சோதனை செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து 25 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர்.
-
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
தங்கம் விலை யூடர்ன்.. இனி தொடர்ந்து உயரபோகுது.. என்ன காரணம் தெரியுமா? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications