மிஞ்சி போன சாதம்..தயாளு அம்மாள் எப்பவுமே இப்படித்தான்.. அதுவும் கோபாலபுரம் வீட்டில்.. பூரித்த துர்கா
சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதியை பற்றி, துர்கா ஸ்டாலின், சில நினைவுககளை பூரித்து அதில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதை பார்த்த திமுகவினர், கலைஞரின் குணம் இப்படிப்பட்டதா? என்று நெகிழ்ந்து போய் அந்த வீடியோவை வைரலாக்கி கொண்டிருக்கிறார்கள்..
சமீபகாலமாகவே, நாயகி என்ற யூடியூப் சேனல் மக்களிடம் பிரபலமாகி வருகிறது.. பத்திரிக்கையாளர் லோகநாயகி, துர்கா ஸ்டாலினை பேட்டி எடுத்து இதில் ஒளிபரப்பி வருகிறார்.
இந்த வீடியோ பேட்டிகளின்போது, துர்கா ஸ்டாலின் மனம்திறந்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.. குறிப்பாக, பூஜை அறை உட்பட அனைத்தையுமே துர்கா இதில் விரிவாக எடுத்து கூறியிருந்தார்.

மாடர்ன் கிச்சன்: தன்னுடைய வீட்டின் கிச்சனையும் அந்த வீடியோவில் விலாவரியாக நேயர்களுக்கு காட்டினார் துர்கா.. அந்த கிச்சனை பார்த்தவர்கள் நிஜமாகவே ஆச்சரியப்பட்டு போனார்கள்.. காரணம், அந்த கிச்சன் இப்போது இருக்கும் மாடர்ன் கிச்சனை போல இல்லாமல், பழமை நிரம்பி காணப்பட்டது.. அடுக்களையில் மண்பானை, அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவைகள் நிரம்பியிருந்தன. இந்த வீடியோ அப்போது இணையத்தில் டிரெண்ட் ஆனது.
அந்தவகையில், இப்போதுகூட ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. அதில், தயாளு அம்மாள் குறித்து நிறைய விஷயங்களை மனம்திறந்து பேசியுள்ளார் துர்கா.. அதன் சுருக்கம்தான் இது:
மீந்து போன சாதம்: "என் அத்தை எப்பவுமே சிக்கனமாக இருப்பாங்க.. வீட்டில் எதையும் வேஸ்ட் செய்ய மாட்டாங்க.. சின்ன சின்ன பொருளாக இருந்தாலும்கூட அதை வேஸ்ட் செய்ய மாட்டாங்க.. வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு, கொஞ்சமா சாதம் மீந்து போனாலும் சரி, அந்த கொஞ்ச சாதத்தையும் எடுத்து, ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வைப்பாங்க.. மறுநாள் அவங்களே அதை சாப்பிட்டுடுவாங்க.. வீட்டில் வேலைக்காரம்மா ஒருநாள் வரலைன்னாகூட கவலையே படமாட்டாங்க.. நாளைக்கு துணி துவைத்து கொள்ளலாம் என்றெல்லாம் நினைக்க மாட்டாங்க..

கூட்டுக்குடும்பம்: அவங்களே எல்லா துணிகளையும் அள்ளி போட்டு, ஊற வைச்சிடுவாங்க.. அப்படி துணிகளை ஊற வைத்துவிட்டால், நாங்க எல்லாரும் தோய்த்துதானே ஆகணும்.. நானும், காந்தி அக்காவும், எல்லாரும் சேர்ந்து அந்த துணிகளை தோய்ப்போம்..
துணியை இப்படி ஊற வெச்சிட்டாங்களேன்னு ஆரம்பத்தில எனக்கு கோவம் கோவமாக வரும்.. மனசுக்கு கஷ்டமா இருக்கும்.,., அப்பறம்தான், அத்தை எங்கள் நல்லதுக்காகத்தான் இதையெல்லாம் செய்யறாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டோம்.. இத்தனை பேர் உள்ள வீட்டில், ஒருநாள் துணி தேங்கிட்டாலும், அது அடுத்தடுத்த நாட்களில் மொத்தமாக சேர்த்து துவைக்க கஷ்டமாகிடும்.. அதனால் அத்தை செய்வது எங்கள் வேலையைதான் சுலபமாக்கியது..
சிக்கனம் அத்தை: வீட்டிலுள்ள கிச்சன் எப்பவுமே அத்தைக்கு சுத்தமா இருக்கணும்.. அதுவும் இரவு நேரங்களிலாவது அதை சுத்தப்படுத்தி வைத்து விட வேண்டும்.. ஒருவேளை சுத்தமாக இல்லைன்னாலும், அவங்களே இறங்கி கிச்சனை சுத்தப்படுத்த ஆரம்பிச்சிடுவாங்க.. ஏதாவது ஒரு வேலையை அவங்க வீட்டில் செய்துட்டே இருப்பாங்க.. அதுக்கப்பறம் அவங்க கிட்ட இருந்து வாங்கி, அந்த வேலைகளை நாங்கள் தொடர்வோம்..

என் பாட்டி கூட இப்படித்தான். கிச்சனை மெழுகி கோலம் போட்டு, பாத்திரங்களை எலலாம் கழுவி சுத்தமா அடுக்கி வெச்சிருப்பாங்க.. என் அத்தையை பார்த்தால், எனக்கு பாட்டி ஞாபகம்தான் வரும்..
வீட்டுக்கு பின்னாடி விறகு அடுப்பு இருக்கும்.. கேஸ் அடுப்பில் நாங்க சமைத்தாலும்கூட, இந்த விறகு அடுப்பில் சில சமையல்களை செய்வோம்.. யாராவது வீட்டுக்கு நிறைய பேர் வந்துவிட்டால், நிறைய சாதம் வடிக்க வேண்டியிருக்கும் அல்லது வெந்நீர் வைப்பதற்கெல்லாம் இந்த விறகு அடுப்பைதான் பயன்படுத்துவோம்.. நான் கல்யாணம் ஆகி வந்தப்போது, கோபாலபுரத்தில் இருந்த பாத்திரங்கள் எல்லாம் இன்னமும் அப்படியேதான் கிச்சனில் பழமை மாறாமல் இருக்கிறது..
எளிமை: அந்த அளவுக்கு அத்தை சிக்கனமாக இருந்ததால்தான், கூட்டுக்குடும்பத்தில் எல்லாரையுமே நல்லாபடியாக வளர்க்க முடிந்தது" என்பது உட்பட இன்னும் பல்வேறு விஷயங்களை அந்த வீடியோவில் பூரித்து சொல்கிறார் துர்கா.. முதல்வரின் வீட்டில் இந்த அளவுக்கு எளிமையா? என்று வாயடைத்து போய் பார்க்கிறார்கள் இணையவாசிகள்.. இவைகளை எல்லாம் இன்றைய இளம் தலைமுறையினரும் பின்பற்ற வேண்டும் என்றும் கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications