தற்கொலை செய்து கொண்ட அசோக் குமாருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை... கோபுரம் பிலிம்ஸ் விளக்கம்
தற்கொலை செய்து கொண்ட அசோக் குமாருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோபுரம் பிலிம்ஸ் விளக்கம் அளித்து இருக்கிறது.
சென்னை: இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 40 வயது நிரம்பிய இவர் அபிராமபுரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
வட்டிக்கு கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் கோபுரம் பிலிம் நிறுவனத்தை சேர்ந்த அன்புச் செழியன் என்பவர்தான் தன் தற்கொலைக்கு காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் அவரது தற்கொலை கடிதத்திற்கு மறுப்பாக ஒரு கடிதம் எழுதி இருக்கிறது. அதில் தற்கொலை செய்து கொண்ட அசோக் குமாருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கோபுரம் பிலிம்ஸ் விளக்கம் அளித்து இருக்கிறது.

அவர் எழுதியதுதானா
அவர்களுடைய கடிதத்தின் படி "செய்தித்தாள்களில் திரு. அசோக்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டு, தற்கொலை கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அசோக்குமார் எழுதியதாக சொல்லப்படும் கடிதம் உண்மையில் அவர் எழுதி வைத்தது தானா.?" என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

அவருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை
மேலும் அந்த கடிதத்தில் ''அசோக்குமார் சசிகுமாரின் உறவினர். நாங்கள் அசோக்குமாருக்கு எந்தவிதமான பண வரவு செலவும் செய்யவில்லை. சசிகுமார் மட்டுமே எங்களிடம் பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் அசோக்குமார் எங்களை பற்றி கடிதத்தில் எழுதி வைத்து இருக்கிறார் என்று கூறப்படுவது அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்து இருக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

சொகுசான வாழ்க்கை
அவர்கள் தங்கள் கடிதத்தில் "நாங்கள் படம் எடுக்க உதவி செய்வதற்காக பணம் கொடுக்கிறோம். எந்தவிதமான செக்யூரிட்டியும் இல்லாமல் நாங்கள் பணம் கொடுக்கிறோம். ஆனால் பணம் வாங்கியவர்கள் படம் எடுக்காமல் கார், வீடு என செட்டில் ஆகிவிடுகிறார்கள். உதவி செய்த எங்களையும் சிரமப்படுத்துகிறார்கள். இதை பயன்படுத்தி மோசடி செய்யவேண்டும் என ஒரு கும்பல் சுற்றுகிறது'' என்று கூறியுள்ளனர்.

உண்மை இல்லை
மேலும் அவர்கள் அந்த கடிதத்தில் "நாங்கள் கடந்த 20 வருடமாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கள் மீது எந்த புகாரும் இல்லை. அசோக்குமார் என்பவர் எழுதியதாக கூறப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை இதன்முலம் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று எழுதி இருக்கின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications