ஆசிரியர் தினம்.. ஆளுநர் ரோசய்யா, பொன்.ராதா, டாக்டர் ராமதாஸ், சரத்குமார் வாழ்த்து
சென்னை: ஆசிரியர் தினம் நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர் ரோசய்யா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் சமூகத்துக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது கல்வி. சமூகத்தில் ஆசிரியர்கள் தூண்களாக உள்ளனர். அவர்கள் இளைஞர்களின் வாழ்க்கையில் ஒளியாக விளங்கி அறிவு களஞ்சியமாக திகழ்கிறார்கள். சுயநலமின்றி அர்ப்பணிப்பு உணர்வோடு வாழ்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
பொன். ராதாகிருஷ்ணன்
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அனைத்து வளர்ச்சிக்கும் அடித்தளமாக இருந்து பணியாற்றுபவர்கள் ஆசிரியர் பெருமக்களே. எனவேதான் பெற்றோருக்கு இணையாக வணங்கப்படுகிற தெய்வஙகளாக ஆசிரியர்கள் போற்றப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு ஆசிரியர் தின விழா நாளில் நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளிடமும் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற இருப்பது கல்வித்துறையில் புதிய அத்தியாயமாகும்.
இவ்வாறு புதிய சிந்தனையை, செயலை, மக்களின் நலனுக்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவரும் இந்நன்னாளில் நாளைய பல்துறை அறிவு ஜீவிகளை உருவாக்கும் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஏழைக்குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள்தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர் களுக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள்... தாய், தந்தைக்கு அடுத்தபடியாக வணங்கப்பட வேண்டியவர்கள். ஆசிரியர்களை தமிழ் சமுதாயம் சிறப்பாக போற்றிக் கொண்டிருக்கும் போதிலும், அரசு அவர்களுக்கு மரியாதை அளிக்கிறதா? என்பது பில்லியன் டாலர் வினாவாக உள்ளது.
தமிழகத்தில் தாய்மொழி வழிக் கல்விக்கு மாற்றாக ஆங்கில வழிக் கல்வி வலிந்து திணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்றி ஆசிரியர்களின் நிலையை உயர்த்தவும், ஆங்கில வழிக்கல்வி முறையை ஒழித்து தாய்மொழி வழிக்கல்வி முறை தழைத்தோங்கவும் பாடுபட வேண்டியது ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைவரின் கடமையுமாகும். அதற்காக இந்த நன்னாளில் நாம் உறுதியேற்க வேண்டும்.
"மாதா பிதா குரு தெய்வம்" என்ற புகழுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்களின் பட்டியலில் நடமாடும் தெய்வங்களாக ஆசிரியப் பெருமக்கள் திகழ்கிறார்கள். வருங்கால சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது மிகஉயர்ந்தது.
கல்விக் கடலில் மாணவ சமுதாயம் என்னும் நல்முத்துக்களை கிடைக்கச் செய்யும் மகத்தான பணிபுரிந்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கு "ஆசிரியர்தினம்" அன்று என் பணிவான வாழ்த்துக்களையும், அவர்களது அரும்பெரும் சேவைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வாழ்த்தியுள்ளார்.
சரத்குமார் வாழ்த்து
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள செய்தியில்,
"மாதா பிதா குரு தெய்வம்" என்ற புகழுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்களின் பட்டியலில் நடமாடும் தெய்வங்களாக ஆசிரியப் பெருமக்கள் திகழ்கிறார்கள். வருங்கால சமுதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது மிகஉயர்ந்தது.
மாணவ சமுதாயம் கல்வி கற்று, முன்னேறி வாழ்வாங்கு வாழ துன்பங்களைப் பொறுத்து அயராது உழைப்பவர்கள் ஆசிரியர்கள். ஆசிரியர்களின் ஆசிர்வாதம்தான் விஞ்ஞானிகளை உருவாக்கியிருக்கிறது. சிந்தனையாளர்களை உருவாக்கியிருக்கிறது. அறிஞர்களை உருவாக்கியிருக்கிறது தொழிலதிபர்களை, வியாபாரிகளை உருவாக்கியிருக்கிறது.
கல்விக் கடலில் மாணவ சமுதாயம் என்னும் நல்முத்துக்களை கிடைக்கச் செய்யும் மகத்தான பணிபுரிந்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கு "ஆசிரியர்தினம்" அன்று என் பணிவான வாழ்த்துக்களையும், அவர்களது அரும்பெரும் சேவைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications