நடுவீதியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அரசு அதிகாரி... காரைக்குடியில்!
காரைக்குடி: மேலதிகாரி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் கூறி காரைக்குடி ஆவின் நிறுவன மேலாளர் நடுவீதியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியிலுள்ள ஆவின் நிர்வாகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாக மேலாளராக பணி புரிந்து வருபவர் கதிரேசன். இவரிடம் ஆவின் பொதுமேலாளர் தங்கராஜ் என்பவர் பால் முகவர்களிடம் லஞ்சம் வாங்கித்தரச் சொல்லி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கு மறுப்புத் தெரிவித்ததால், தற்காலிக பணியிடை நீக்கம், பணியிட மாறுதல் போன்ற பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கதிரேசன் உயரதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தேவகோட்டை கோட்டாட்சியர் சிதம்பரம் முன்னிலையில், காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று விசாரணை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் அங்கிருந்த வெளியேறிய கதிரேசன், கையில் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சாலையிலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கதிரேசனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஏற்கனவே, மேலதிகாரிகளின் நெருக்கடியால் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு நிலவி வரும் வேளையில், காரைக்குடியில் அரசு அதிகாரி ஒருவர் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications