விஜய்யை விடுங்க.. மாணவியை விமானத்தில் அழைத்துச் சென்று ‘ட்ரீட்’ வைத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை!
திருச்சி: பொதுத்தேர்வுகளில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி வருகிறார் நடிகர் விஜய். இதே நேரத்தில், தேசிய திறனறி தேர்வில் வென்ற மாணவிக்கு, அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை கொடுத்த பரிசு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ளது வானவநல்லூர். இங்கு உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை மொத்தம் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மத்திய அரசின் சார்பில் தேசிய திறனறி தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

இந்த தேர்வை ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில் எழுதினர். இந்த தேர்வு மையத்தில் வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 8 பேர் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வேன் என ஏற்கனவே அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா தெரிவித்து, மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தியிருந்தார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளியில் ஆசிரியர்களும் பயிற்சி அளித்துள்ளனர்.
இந்நிலையில் திறனறி தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதில் வானவநல்லூர் அரசுப் பள்ளி மாணவி மிருணாளினி தேர்ச்சி பெற்றார். இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை அமுதா கூறியபடி, மாணவி மிருணாளினி விமானத்தில் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

அதன்படி கடந்த புதன்கிழமை, மாணவி மிருணாளினியை திருச்சி விமான நிலையத்திற்கு அழைத்து சென்றார் தலைமை ஆசிரியை அமுதா. அங்கிருந்து விமானம் மூலம் அவர்கள் சென்னைக்கு சென்றனர். மாணவி மிருணாளினி மகிழ்ச்சியுடன் விமானத்தில் பயணம் செய்தார்.
தேசிய திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை தலைமை ஆசிரியை விமானத்தில் பயணிக்க வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மற்ற மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்துவதாகவும் தலைமை ஆசிரியையின் செயல் அமைந்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications