ஓவியப் போட்டி... அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்... தனியார் மாணவர்களை பின்னுக்கு தள்ளி முதலிடம்
தேவகோட்டை: எல்.ஐ.சி சார்பில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் தனியார் பள்ளி மாணவர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளனர் தேவகோட்டை அரசு பள்ளி மாணவர்கள்.
எல்.ஐ.சி. சார்பாக ஓவியப் போட்டி அண்மையில் தேவகோட்டையில் நடைபெற்றது. இதில் தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் பாலமுருகன் பங்கேற்று முதலிடத்தைப் பிடித்தார்.

எல்.ஐ.சி. சார்பாக ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் ஓவியப் போட்டியில் முதலிடம் பிடித்த பாலமுருகன் மற்றும் 4ம் வகுப்பு மாணவர் கிஷோர்குமார் ஆகியோருக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும், போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு வாழ்த்துகளும் தெரிவிக்கபட்டன.
நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிறைவாக மாணவி அல்நிச்மா நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, விழாவிற்கு வந்தவர்களை பள்ளி மாணவர் ராஜேஷ் வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications