மொபைலில் ஆபாச வீடியோ எடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் கைது!
திருநெல்வேலி : நெல்லையில் பெண்கள் குளிப்பதை மொபைலில் வீடியோ எடுத்ததாக பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி, வள்ளியூரை அடுத்துள்ள பணகுடி, ரோஸ்மியாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு ஆசிரியராக இருப்பவர் அந்தோணிசாமி. இவர் பணகுடி, நதிப்பாறையில் பொதுநல்லியில் குளித்துக்கொண்டிருந்த பெண்களை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வழியே சென்ற ரமேஷ் என்பவர் இதனை தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரமுற்ற ஆசிரியர் அந்த நபரை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
அந்த நபரின் புகாரின் பேரில் பணகுடி போலீசார் ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் அந்தோணிசாமி இதற்கு முன்பு பணியாற்றிய பள்ளிகளில் மாணவிகளை ஆபாசமாக மொபைலில் வீடியோ எடுத்துள்ளதும் தெரியவந்தது. அவரது மொபைல் போனில் இருந்த ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகி்ன்றனர்.












Click it and Unblock the Notifications