ஆளுநரை சந்தித்த முதல்வர், துணை முதல்வர்... காவிரி விவகாரம் குறித்த ஆலோசனை என தகவல்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இதனால் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன.

காவிரி வாரியம் அமைப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. எனவே வரும் மே 3-ஆம் தேதி நல்ல தீர்ப்பு வரும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முறைமன்ற நடுவராக சோ.அய்யர் மீண்டும் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தனி அறையில் சந்தித்து பேசினர்.
இதுபோன்ற பதவியேற்பு விழாவுக்கு பின்னர் மரியாதை நிமித்தமாக ஆளுநரை முதல்வர் சந்திப்பது வழக்கமான ஒன்று என்று கூறப்பட்டாலும் காவிரி விவகாரத்தில் அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆளுநர் தனி அக்கறை காட்டுவதாலும் வரும் 3-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி தொடர்பாக தமிழக அரசின் சீராய்வு மனு விசாரணை வருவதாலும் இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications