தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
கோவை: ஜெயலலிதா தண்டனை பெற்றதையடுத்து நடைபெறும் கலவரங்களை தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஆளுநர் தலையிட வேண்டும் என்று பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. கடந்த ஆண்டில் பாமக போராட்டம் நடத்தாமலே எங்கள் மீது வழக்கு தொடர்ந்தார்கள். ராமதாசை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். 8 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 140 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால் இன்று அ.தி.மு.க.வினர் எங்கு பார்த்தாலும் அனுமதியின்றி போராட்டம் செய்து வருகிறார்கள். பஸ்கள் கொளுத்தப்பட்டு உள்ளன. கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளன.

சென்னையில் கடந்த 5 ஆண்டுகளாக 2 இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் நேற்று மட்டும் 45 இடங்களில் ஆளும் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. எனவே கவர்னர் நடவடிக்கை எடுத்து சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
ஜெயலலிதாவுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தரக்குறைவாக பேசுவது சட்டத்தை அவமதிப்பு செய்வது ஆகும். சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம். எனவே ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஆளும் கட்சியினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். கோர்ட்டில் மேல் முறையீடு செய்யலாம்.
ஆனால் அதை செய்யாமல் வீதிகளில் இறங்கி போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று பஸ் உரிமையாளர்களை மிரட்டி, தனியார் பஸ்களை ஓடாமல் செய்து உள்ளனர். அதுபோன்று பள்ளிக்கூட நிர்வாகிகளையும் மிரட்டி பள்ளிக்கூடங்களையும் திறக்க விடாமல் செய்ய உள்ளனர். எனவே இதுபோன்ற நடவடிக்கையில் ஆளும் கட்சியினர் ஈடுபடுவதை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications