கூவத்தூரில் அடைபட்ட அத்தனை எம்.எல்.ஏக்களையும் ஆளுநர் விசாரிக்க ஓ.பி.எஸ். அணி கோரிக்கை
கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா அணி விலைக்கு வாங்கியது தொடர்பாக கவர்னர் உடனடியாக விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் அணி வலியுறுத்தியுள்ளது.
சென்னை: கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களை சசிகலா அணி விலைக்கு வாங்கியது தொடர்பாக கவர்னர் உடனடியாக விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் அணி வலியுறுத்தியுள்ளது. தமிழக எம்எல்ஏக்கள் 234 பேரையும் விசாரிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
சசிகலா அணி எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற பல கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும், கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோருக்கு தலா ரூ. 10 கோடி பணம் தரப்பட்டதாகவும் மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளார். இது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன் டிவி மற்றும் டைம்ஸ் நவ் டிவி சேனல்களில் சரவணன் எம்.எல்.ஏ அளித்த விளக்கம் ரகசியமாக வெளிவந்துள்ளது. இதுதொடர்பாக மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் கூறியதாவது, சொந்த ஊரில் இருந்து வந்த எம்.எல்.ஏ.க்களை விமானநிலையத்திலேயே சசிகலா கோஷ்டி மடக்கியதாக கூறியுள்ளார்.

விமான நிலையத்திலேயே மடக்கினர்
விமான நிலையத்தில் பேருந்தில் ஏற்றியபோது எம்.எல்.ஏ.வுக்கு தலா ரூ.2 கோடி என பேரம் பேசினார்கள் என்றும் பின்னர் எம்.எல்.ஏ. விடுதியில் இருந்து கவர்னரை சந்திக்க சென்றபோது பேரம் ரூ.4 கோடியானது. கூவத்தூர் சேர்ந்தபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.6 கோடி தர முன்வந்தனர் என்றும் கூறியுள்ளார்.

தலைக்கு ரூ.10 கோடி
மேலும் ஒரே நேரத்தில் பல கோடி திரட்ட முடியாது என்பதால் தங்கமாக தருவதாக கூறினார்கள். தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி போன்ற கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு தலா 10 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு சரவணன் கூறியுள்ளது வெளிவந்துள்ளது.

ஆளுநர் விசாரிக்கனும்
எம்எல்ஏக்களை சசிகலா அணி விலைக்கு வாங்கியது இதுவைரை இலை மறை காயாக இருந்த நிலையில் சரவணன் எம்எல்ஏ மூலம் இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்நிலையில் தமிழக ஆளுநர் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்பி தெரிவித்துள்ளார்.
|
234 எம்எல்ஏக்களும்
மேலும் 234 எம்எல்ஏக்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் மைத்ரேயன் எம்பி வலியுறுத்தியுள்ளார். சசிகலா கோஷ்டியால் எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்பட்ட சம்பவம் இந்திய அரசியலில் தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications