For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனாதிபதியிடம் ஆளுநர் அறிக்கை ஒப்படைப்பு! டிஸ்மிஸ் ஆகிறதா எடப்பாடி பழனிச்சாமி அரசு?

சட்டசபை சம்பவங்கள் தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிய அறிக்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிய அறிக்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி மேற்கொள்ளப் போகும் நடவடிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபையில் கடந்த 18-ந் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

மார்ஷல் சீருடையில் போலீஸ்

மார்ஷல் சீருடையில் போலீஸ்

போலீஸ் அதிகாரிகளை சட்டசபை மார்ஷல் சீருடையில் வரவழைத்து சபாநாயகர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்றினார். அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

கிழிக்கப்பட்ட சட்டை

கிழிக்கப்பட்ட சட்டை

இச்சம்பவம் தொடர்பாக கிழிக்கப்பட்ட சட்டையுடனே ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் முறையிட்டார். திமுக எம்.பிக்கள் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியினரும் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து புகார் தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசுக்கு அறிக்கை

மத்திய அரசுக்கு அறிக்கை

இதையடுத்து சட்டசபை செயலர் ஜமாலுதீனிடம் ஆளுநர் வித்யாசகர் அறிக்கை கேட்டிருந்தார். இதனடிப்படையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு ஆளுநர் வித்யாசகர் ராவ் நேற்று அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு

ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு

இந்த அறிக்கை இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசுக்கு எதிராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்வார்? ஆட்சியை டிஸ்மிஸ் செய்வாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Tamil Nadu Governor Vidyasagar Rao's detailed report on Tamilnadu Assembly incidents submitted to President Pranab Mukherjee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X