ஆளுநர் ஆய்வு செய்வது ஆரோக்கியமானது.. சொல்றது நம்ம செல்லூர் ராஜூ!
ஆளுநர் ஆய்வு செய்வது ஆரோக்கியமானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை: ஆளுநர் ஆய்வு செய்வது ஆரோக்கியமானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் கோவையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நேற்றும் இரண்டாவது நாளாக ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு நடத்தினார்.
இதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநில சுயயாட்சி உரிமையை பறிக்கும் மத்திய அரசின் நடவடிக்கை இது என குற்றம்சாட்டினர்.

கவலைப்படாத அமைச்சர்கள்
ஆனால் ஆய்வு செய்தால்தானே அரசை பாராட்ட முடியும் என்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தமிழக அமைச்சர்கள் ஆளுநரின் ஆய்வு குறித்து எந்த கவலையும் படவில்லை.

ஆளுநர் ஆய்வுக்கு ஆதரவு
ஆளுநர் ஆய்வு செய்ததில் எந்த தவறும் இல்லை என்றார் அமைச்சர் வேலூமணி. ஆளுநர் ஆய்வு செய்ததை டேக் இட் ஈசியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

ஆளுநர் ஆய்வு ஆரோக்கியமானது
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமாரும் ஆளுநரின் ஆய்வுக்கும் அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக்கும் வரவேற்பு தெரிவித்தார். இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஆளுநர் ஆய்வு செய்வது ஆரோக்கியமானது என தெரிவித்துள்ளார்.

தேவையான உதவிகள் கிடைக்கும்
ஆய்வு செய்தால்தான் மத்திய அரசிடம் பேசி மாநிலத்திற்கு தேவையான உதவிகளை ஆளுநர் பெற்றுத்தருவார் என்றும் அவர் கூறினார். மேலும் திமுக ஆட்சியில் தான் போக்குவரத்து கழகங்கள் நலிவடைந்தது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications