இன்று அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் அடையாள வேலைநிறுத்தம்!
சென்னை: ஓய்வூதியப் பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.
இதுகுறித்து சென்னையில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் கூறுகையில், "கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதிக்கு பின்னர் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் இப்போது 5 லட்சம் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஊதியத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.18 ஆயிரத்து 300 கோடி. இந்த பணம் அனைத்தும் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் வளர்ச்சி ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதுவரை ஒப்படைக்கவில்லை.
இந்த பணம் எங்கே? என்பதற்கு இதுவரை பதில் இல்லை. இந்த திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் யாருக்கும் இந்த ஓய்வூதியம் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் பாராளுமன்றத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதாக கூறியபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் அந்தக் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்கள். மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவோம் என்றார். ஆனால் இதுவரை கொண்டுவரப்படவில்லை.
எனவே தான் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை. எனவே தான் அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொள்வார்கள். போராட்டத்திற்கு பிறகும் அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம்," என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications