தக்காளி கிலோ ரூ.43, வெங்காயம் ரூ.39: பண்ணை பசுமைக் கடைகளில் விற்பனை
சென்னை: மழையால் காய்கறிகளின் விலை உயர்வதை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் பண்ணை பசுமை கடைகள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் திறக்கப்பட்டுள்ள இந்த காய்கறிக் கடைகள் அனைத்தும் தற்காலிகமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பசுமைப் பண்ணைக் கடைகளில் விலை குறைவான அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிக அளவில் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
சென்னையில் பண்ணை பசுமை கடைகள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ள நிலையில், பிற சில்லறை விற்பனை கடைகளிலும் பண்ணை பசுமை கடைகளிலும் உள்ள விலை வித்தியாசம் அதிகம் உள்ளது.
பண்ணை பசுமை கடைகளில் தக்காளி, கத்தரிக்காய், சுரக்காய், அவரை, உருளை,கேரட், பீட்ரூட் போன்ற காய்கள், தருமபுரி, நீலகிரி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேரடியாக அரசால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

வெங்காயம் விலை குறைவு
பண்ணை பசுமை கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 39 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற கடைகளில் இதன் விலை 50 முதல் 60 ரூபாய் வரை உள்ளது.

தக்காளி விலை
பண்ணை பசுமை கடையில் தக்காளியின் விலை 43 ரூபாயாக உள்ள நிலையில் பிற கடைகளில் இது 100 ரூபாயாக உள்ளது. கத்தரிக்காய் விலை பண்ணை பசுமை கடைகளில் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிற கடைகளில் இது 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கிழங்குகளின் விலை
உருளைக்கிழங்கு விலை பண்ணை பசுமை கடைகளில் 23 ரூபாயாகவும் பிற கடைகளில் 40 ரூபாயாக உள்ளது. பீட்ரூட் விலை பண்ணை பசுமை கடைகளில் கிலோ 19 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற கடைகளில் இது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பெண்கள் மகிழ்ச்சி
புடலங்காய் விலை பசுமை பண்ணைகடைகளில் 27 ரூபாயாகவும் பிற கடைகளில் 40 ரூபாயாகவும் இருக்கிறது. வெளியில் சில்லறையில் விற்பனை செய்யப்படும் கடைகளை விட பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பதால் ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகம் முழுவதும் திறக்கப்படுமா?
சென்னையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் விலைவாசியை கட்டுப்படுத்த பண்ணை பசுமை காய்கறி கடைகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முதல்வர் மனது வைப்பாரா?
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications