ஆசிரியர்கள் பெயர் இன்ஷியலை தமிழில் எழுத உத்தரவு - கல்வி துறை அதிரடி
நாகர்கோவில்: ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்கள் பெயரின் இன்ஷியலை தமிழில் எழுத வேண்டும் என தமிழக கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் தங்கள் பெயரில் தலைப்பு எழுத்தை (இன்ஷியல்) தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்ற அரசின் உத்தரவை தொடர்ந்து அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் அனைவருக்கும் தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஓரு சில மாவட்டங்களில் பணி செய்யும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்கள் பெயரின் தலைப்பு எழுத்துகளை தமிழில் எழுதவில்லை என்றும், ஆங்கிலத்தில் எழுதுகின்றனர் என்றும், இத்தகைய செயல்பாடுகள் அரசு ஆணையை மீறியது என்று புகார்கள் எழுந்துள்ளன.
இதனை தொடர்ந்து தமிழக தொடக்க கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அரசாணைப்படி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், அமைச்சு பணியாளர்கள் பெயரின் தலைப்பு எழுத்துகளை தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இந்த அரசாணைப்படி தங்கள் பெயரின் தலைப்பு எழுத்துகளை தமிழில் மட்டுமே எழுத அறிவுரை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளபபடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications