3 போலீசாரை நீக்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை... அடிவாங்கிய ஆட்டோ டிரைவர் ராஜா
செங்கம்: தமது குடும்பத்தினரைத் தாக்கிய 3 செங்கம் போலீசாரை பணியில் இருந்து நீக்காவிட்டால் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம் என்று செங்கம் ஆட்டோ டிரைவர் ராஜா கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜா, அவருடைய மனைவி உஷா, மகன் சூர்யா ஆகியோரை போலீசார் திங்கள்கிழமையன்று நடுவீதியில் நிறுத்தி கொடூரமாகத் தாக்கினர்.

ராஜாவும் அவரது குடும்பத்தினரும் நகை வாங்குவது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போதுதான் போலீசார் தேவையில்லாமல் தலையிட்டு கொடூரமாகத் தாக்கினர் .இந்த வீடியோ காட்சி ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன், போலீஸ்காரர் விஜயகுமார், நம்மாழ்வார் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
ஆனால் 3 போலீசாரையும் சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ ஓட்டுநர் ராஜா, போலீசார் எங்களை நடு ரோட்டில் தாக்கியது மட்டு மல்லாமல் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அங்கு வைத்தும் அடித்தனர். அப்போது அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எங்களை விசாரித்து அனுப்பினார்.
போலீசார் அடித்த வலிதாங்காமல் செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றோம். அங்கு வந்த போலீசார் மறுபடியும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடாது என்றும், தனியார் மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்றும் கூறினார்கள்.
அதைத்தொடர்ந்து அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதை அடுத்து எங்களை சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பொதுமக்களின் முற்றுகை, சாலை மறியல் காரணமாக 3 போலீசாரையும் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றி உள்ளனர். எங்களை கண்மூடித்தனமாக தாக்கிய 3 போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்வோம் என்றார்.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications