முன்னாள் முதல்வர் காமராஜரின் தம்பி பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார்
சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜரின் தம்பி பேத்தி மயூரி கண்ணன் தனது குடும்பத்துடன் திமுகவில் இணைந்தார். சென்னை அறிவாலயத்தில் இன்று திமுக பொருளாளர் ஸ்டாலின் முன்னணியில் திமுகவில் இணைந்தனர்.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கை:
திமு கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (2.4.2016) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் பெருந்தலைவர் காமராஜர் பெயர்த்தி டி.எஸ்.கே.மயூரி கண்ணன் மற்றும் பெருந்தலைவர் அவர்களின் இளைய சகோதரரின் மகள் சந்திரா, கண்ணன், ராஜாமணி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
முன்னாள் முதல்வர் காமராஜரின் தம்பி பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார் pic.twitter.com/Yu1wFy8ITn
— Oneindia Tamil (@thatsTamil) April 2, 2016
அதுபோது கழக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், தலைமை நிலையச் செயலாளர்கள் கு.க.செல்வம், துறைமுகம் காஜா, ஆ.த.சதாசிவம், இளைஞர் அணி துணைச் செயலாளர் ஆர்.டி.சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
காமராஜரின் அப்பாவும், மயூரியின் தாத்தாவும் அண்ணன், தம்பிகள். அண்ணாமலை நாடார், என்பவரின் மகள் சந்திராவின், மகள்தான் இந்த மயூரி. சென்னை, தண்டையார்பேட்டையில் குடியிருந்து வருகின்றனர். கணவர் கண்ணன், தொழிலதிபர்; பருப்பு மில் வைத்து இருக்கிறார். எம்.ஏ.அரசியல் நிர்வாகம் பயின்ற மயூரி, 2014ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். என்னை காமராஜரின் பேத்தி என்ற அடையாளம் பாஜகவில் கிடைக்கவில்லை என்று கூறி கடந்த ஆண்டே திமுகவில் இணையப் போவதாக கூறினார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கு, தென் மாவட்டங்கள் முழுவதும், தி.மு.க. வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று மயூரி கண்ணன் கூறியுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications