பழைய கண்ணாடி கதவு, கிரானைட் சுவருக்கு பேரீச்சம்பழம் – விமான நிலையத்தில் 33வது விபத்து!
சென்னை: வழக்கமாக கண்ணாடிகள் மட்டுமே உடைந்து சிதறி வரும் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் முதல் முறையாக கிரானைட்டுகளால் ஆன பக்கவாட்டுச் சுவர் நேற்று உடைந்து விழுந்தது.
இந்த விபத்தையும் சேர்த்தால் இதுவரையில் 33 தடவை விமான நிலைய கண்ணாடி கதவுகளும், சுவர்களும் இடிந்து விழுந்துள்ளது.
மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

உடைஞ்சு உடைஞ்சு விழுது:
கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 11 முறை மேற்கூரைகளும், 9 முறை கண்ணாடி கதவுகளும், 8 முறை தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் என 32 முறை உடைந்து விழுந்து உள்ளன. இந்த சம்பவங்களில் 4 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
உள்நாட்டு முனையம்:
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் உள்ள மேலாளர் அறை அருகே வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளுக்காக லிப்ட் வசதி உள்ளது.
உடைந்து விழுந்த கிரானைட்:
இதில் புறப்பாடு பகுதியில் உள்ள லிப்ட்டின் சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்த 5 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட 2 கிரானைட் கற்கள் நேற்று காலை 9.30 மணிக்கு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்தன.
ஓட்டம் பிடித்த பயணிகள்:
அந்த நேரத்தில் நுழைவு எண் 1 ஆவது வாசல் வழியாக கொச்சி, பெங்களூரு செல்ல இருந்த பயணிகள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.
ஜஸ்ட் 33 ஆவது தடவைதான்:
அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது 33 ஆவது முறையாக நடந்த சம்பவமாகும்.
விரைந்து அகற்றிய ஊழியர்கள்:
தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் விரைந்து வந்தனர். பின்னர் உடைந்து விழுந்த கற்களை அகற்றினார்கள். தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் கண்ணாடி கதவு, மேற்கூரை உடைந்து விழும் சம்பவங்களால் பயணிகள் அச்சத்துடன் உள்ளனர்.
பயப்படாதீங்க பயணிகளே:
இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "சாதாரண சம்பவம் தான் யாரும் பயப்பட வேண்டாம். கிரானைட் கற்கள் ஒட்டிய சிமெண்டு சரியாக ஒட்டப்படாததால் விபத்து நடந்து உள்ளது. இது பற்றி முறைப்படி விசாரணை நடத்தி வருகிறோம்" என்று "33 ஆவது முறையாக" தெரிவித்தனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications