திறந்த வெளியில் அசுத்தம் – தடுப்பு நடவடிக்கை குறித்து பதிலளிக்க தெற்கு ரயில்வேக்கு நோட்டீஸ்
சென்னை: திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே பொதுமேலாளரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த உத்தரவின் பேரில் விளக்கம் அளிக்காவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்றும் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் ரயில் தண்டவாளத்தின் ஓரத்திலேயே மக்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதனை தடுக்க வேண்டும் என்றும், சென்னை மாநகராட்சியில் பொதுகழிப்படங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், சுரேந்தரநாத் கார்த்திக் என்பவர் பசுமை தீர்ப்பாயம் தென்மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், பொதுகழிப்பிடங்களை அதிகரிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, தெற்கு ரயில்வே பொதுமேலாளரும், சென்னை மாநகராட்சி ஆணையரும் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
உத்தரபடி இருவரும் ஆஜராகமல் இருந்ததற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications