8 வழிச்சாலை.. தன் நிலம் பறிபோனதால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
8 வழிச்சாலைக்கு நிலம் பறிபோனதால் விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
Recommended Video

செங்கம்: 8 வழி பசுமை சாலைக்கு தன்னுடைய நிலம் கையகப்படுத்தியதால் செங்கம் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமை விரைவுச்சாலை அமைக்க, மத்திய அரசு காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இதனால் அந்தந்த மாவட்ட மக்கள் கொதிப்படைந்து, பல்வேறு போராட்டங்களை நடத்தினர். சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தன்னுடைய நிலம் பறிபோய்விட்ட காரணத்தினால் செங்கம் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செங்கம் அடுத்த வணக்கம்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் சேகர். 55 வயதான விவசாயி இவர். இவருக்கு பாசன கிணற்றுடன் 3 ஏக்கர் நிலம் உள்ளது. நில அளவீடு செய்தபோது இவருடைய நிலமும் பறிபோகும் என தெரியவந்தது.
இதனால் தன் நிலம் போய்விட்டால், தன்னால் உயிரோடு இருக்க முடியாது என்றும் உறவினர்களிடம் அடிக்கடி கூறி வந்திருக்கிறார். அதற்கேற்றார்போல் நிலமும் கையகப்படுத்தப்பட்டு விட்டதால் சேகர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மேல்செங்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications